விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
தெலுங்குத் திரையுலகத்தின் சமீபத்திய வசூல் நட்சத்திரமாக உயர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த 'அர்ஜுன் ரெட்டி, மகாநடி, கீதா கோவிந்தம்' ஆகிய படங்கள் நல்ல வசூலைக் கொடுத்து வெற்றிகரமான படங்களாக அமைந்தன. அதே விதத்தில் அவர் நடித்து வெளிவந்த 'டியர் காம்ரேட்' படமும் வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
முதல் மூன்று நாட்களில் சுமார் 20 கோடி வரை பங்குத் தொகையாக இந்தப் படம் கொடுத்ததாம். அதனால் அடுத்தடுத்த நாட்களிலும் அது அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ஆனால், நேற்று திங்கள் கிழமை படத்தின் வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இந்த வசூல் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தால் படம் 'பிரேக் ஈவன்'ஐ சந்திக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் டோலிவுட்டில்.
தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த வெள்ளியன்று வெளியான படங்களில் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள 'ஏ 1' படம் வசூல் ரீதியாக முன்னணியில் உள்ளதாகச் சொல்கிறார்கள்.