Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகா ஏன் வெற்றியடைகிறார்?: சூர்யா வெளிப்படை

28 ஜூலை, 2019 - 16:24 IST
எழுத்தின் அளவு:
surya-open-talk-about-jyothika-success

நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஜாக்பாட். 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை கல்யாண், எழுதி-இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில், ஜோதிகா, கல்யாண், சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஜோதிகா பேசும் போது, எனக்கு எல்லா விதங்களிலும் உதவியாக இருப்பவர் என்னுடைய கணவர் சூர்யாதான். அவர் எனக்கு இந்த படத்தில் சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக, நிறைய டிப்ஸ்கள் கொடுத்ததோடு, அதற்கு தேவையான பொருட்களையும் எனக்கு வாங்கிக் கொடுத்து, சண்டைக் காட்சிகளில் நடிக்க எனக்கு பேருதவி புரிந்தார். என்னைப் பொறுத்த வரையில், எனக்கான ஜாக்பாட் சூர்யா தான் என, சூர்யா புராணம் பாடி புகழ்ந்தார்.


அடுத்து பேசிய சூர்யா, தன்னுடைய மனைவி ஜோதிகா புராணம் பாடினார். அவர் பேசியதாவது:


என் மனைவி ஜோதிகா என்னைப் பற்றி இங்கே புகழ்ந்து பேசினார். என்னுடைய ஜாக்பாட் சூர்யா என்று பேசினார். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்தான் எனக்கான ஜாக்பாட். நான் என்ன நினைக்கிறேன் என்பது அவருக்கு தெரியும். அதைத் தாண்டி ஒரு நாளும் செய்ய மாட்டார். குறிப்பறிந்து நடந்து கொள்வதில், அவருக்கு நிகர் அவர்தான். எந்த வேலையைச் செய்தாலும், அதை சின்சியராக எப்படி செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்துதான் நானே கற்றுக் கொள்கிறேன். தெரியாத பல விஷயங்களை ஓபனாக அவரிடம் சொல்லி, யோசனை கேட்பேன்.


அவர் சொல்லும் யோசனை சரியாகவே இருக்கும். அதை நான் செய்வேன். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது. அவர் சினிமாவில் நடிப்பதற்காக தனக்கு வாய்ப்பு வருகிறது என நினைத்து, எல்லா படங்களையும் ஒப்புக் கொள்வதில்லை. எல்லா கோணங்களிலும் யோசித்து, எல்லாமே சரியாக இருக்கும்பட்சத்தில்தான், படத்தில் நடிக்கவே ஒப்புக் கொள்கிறார்.


அதனால்தான், அவர் படங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். அந்த வகையில், தற்போது, ஜோதிகாவும் தமிழ் நாட்டுப் பெண்ணாகவே முழுக்க முழுக்க மாறி விட்டார். ஜாக்பாட் படத்தைப் பொறுத்த வரையில், ஜோதிகாவுக்கான படம் இது. இந்தப் படமும் கட்டாயம் வெற்றியடையும். இவ்வாறு சூர்யா பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இளைய சூப்பர் ஸ்டார் ஆகிறார் தனுஷ்இளைய சூப்பர் ஸ்டார் ஆகிறார் தனுஷ் லாஸ்லியாவை விமர்சித்த சுஜா வருணி லாஸ்லியாவை விமர்சித்த சுஜா வருணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in