Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன்

28 ஜூலை, 2019 - 13:52 IST
எழுத்தின் அளவு:
parthiban-to-join-in-ponniyin-selvan

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக நட்சத்திரத் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் என்ற அளவிற்கு பல நட்சத்திரங்கள் படத்திற்காக ஒப்பந்தம் ஆகி வருவதாக செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

ஐஸ்வர்யா ராய் தவிர வேறு யாரும் இந்த சரித்திரப் படத்தில் நடிப்பதைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்தார்கள். இப்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கப் போவதைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


“படத்தைப் பார்த்தாலே பொருள் விளங்கும். திரு.மணிரத்னம் படைப்பில், என் பங்களிப்பில், பெருங்களிப்பில் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்திற்காக ஸ்பெல்லிங் மட்டுமே கற்றிருந்த நான் ஸ்விம்மிங் கற்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


பார்த்திபன் குறிப்பிட்டுள்ள 'ஸ்விம்மிங் கற்கிறேன்' என்பதில் ஒரு அர்த்தம் புதைந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' நாவலில் படகிலேயே பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கலாம் என்பது அதிலிருந்து தெரிகிறது. அதைத்தான் அவர் மறைமுகமாக 'ஸ்விம்மிங்' எனக் குறிப்பிட்டிருக்கலாம்.


பார்த்திபன் இதற்கு முன் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் சோழ மன்னன் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?: பதற்றத்தில் அட்லிபிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ... படங்கள் ரிலீஸ், அதிர வைக்கும் ஆகஸ்ட் முதல் வாரம் படங்கள் ரிலீஸ், அதிர வைக்கும் ஆகஸ்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ஸ்ரீதேவி - தூத்துக்குடி,இந்தியா
29 ஜூலை, 2019 - 18:18 Report Abuse
ஸ்ரீதேவி பெரிய பழுவேட்டரையர்??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in