Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?: பதற்றத்தில் அட்லி

28 ஜூலை, 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
did-bigil-to-release-for-diwali-:-director-atlee-in-confusion

தெறி, மெர்சல் படங்கள் நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் அட்லி இயக்கத்திலும் உருவான படங்கள். இவ்விரு படங்களைத் தொடர்ந்து, அதே கூட்டணி தற்போது பிகில் படத்தை உருவாக்கி வருகின்றனர். பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, வேகமாக படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆவது சிரமம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கும் பிகில் படத்தில், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்து வருகிறார்.


மகளிர் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், நடிகர் விஜய் மகளிர் காலபந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். படத்தில், நடிகர் விஜய்க்கு இரு கேரக்டர்கள். அப்பா-மகன் இரு வேடங்களில் அவர் நடிக்கிறார். மைக்கேல், ராயப்பன் என்பவை கேரக்டர்களின் பெயர்கள்.


படத்தில் இடம்பெறும் சிங்கப் பெண்ணே என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு, அது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.


இந்நிலையில்தான், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகச் செய்தி கிளப்பி விடப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், படத்தின் சண்டைக் காட்சிகளை படு விறுவிறுப்பாக எடுத்து வரும் ஸ்டெண்ட் மாஸ்டர், தான் திட்டமிட்டிருக்கும் எல்லா ஸ்டண்ட் காட்சிகளையும் எடுக்க வேண்டுமானால், இன்னும் 22 நாட்களுக்கு படபடிப்பை நடத்த வேண்டும் என கூறியிருக்கிறாராம்.


இன்னும் 22 நாட்களுக்கு படபிடிப்பு நடத்த வேண்டும் என்றால், படத்தை குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்ய முடியாது என, படக் குழு தெரிவித்துள்ளதாம். இதனால், திட்டமிட்டபடி வரும் தீபாவளி நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறாராம் இயக்குநர் அட்லி.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீரா மீது தர்ஷன் காதலி காட்டம்மீரா மீது தர்ஷன் காதலி காட்டம் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்த்திபன் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

28 ஜூலை, 2019 - 17:02 Report Abuse
Viji Viji ,,,,ஜோசப் விஜய், அட்லீ, நயன்தாரா,டேனியல் பாலாஜி இது போன்ற இந்த படத்தில் இருக்கும் 60 பேர் அல்லேலுயா குரூப் தான்...கிறிஸ்துமஸ் அன்னைக்கு பண்ணனா தவறில்லை.
Rate this:
28 ஜூலை, 2019 - 17:01 Report Abuse
Viji Viji ஜோசப் விஜய், அட்லீ, நயன்தாரா,டேனியல் பாலாஜி இது போன்ற இந்த படத்தில் இருக்கும் 60 பேர் அல்லேலுயா குரூப் தான்...கிறிஸ்துமஸ் அன்னைக்கு பண்ணனா தவறில்லை...
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
28 ஜூலை, 2019 - 15:04 Report Abuse
uthappa கிறிஸ்துமஸுக்கு ரிலீசு பண்ணுங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in