Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல் காட்சிகள் நீக்கம், கென்னடி கிளப் 2ம் பாகம்: ரகசியங்களை வெளியிட்ட சசிகுமார்

28 ஜூலை, 2019 - 12:36 IST
எழுத்தின் அளவு:
sasikumar-revealed-kennady-club-secret

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமாக சுசீந்திரன் தற்போது கென்னடி கிளப் என்ற படத்தை இயக்கி உள்ளார். இது பெண்கள் கபடி தொடர்புடைய படம். இதில் சசிகுமார், புதுமுகம் மீனாட்சி, பாரதிராஜா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிஜ கபடி வீராங்கணைகளும் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சசிகுமார் படத்தை பற்றிய பல ரகசியங்களை போட்டு உடைத்தார். அவர் பேசியதாவது:

விளையாட்டு சம்பந்தமான ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தபோது இந்த பட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் கபடி பற்றிய படம் என்றும் இன்னும் ஆர்வமாக ஒப்புக் கொண்டேன். எனது தோற்றத்தை மாற்றி எனக்கே என்னை புதிதாக காட்டினார் சுசீந்திரன். இந்த படத்தில் கபடி வீராங்கணைகளின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. அவர்களே நடித்தும் இருககிறார்கள். அந்த வகையில் இது பயோபிக் படம்.


எனக்கும், மீனாட்சிக்கும் நிறைய காதல் காட்சிகளை எடுத்தார். ஆனால் படம் போகிற வேகத்திற்கு அந்த காட்சிகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அந்த காட்சிகள் படத்தின் 2ம் பாகத்தில் பயன்படுத்தப்படலாம். அதுதவிர இரண்டாம் பாகத்திற்கென்றே பல காட்சிகளை எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் நான் கபடி கோச்சராக நடித்திருக்கிறேன். நான் எப்படி கோச்சர் ஆனேன், புரோ கபடியில் எனக்கு என்ன நடந்தது என்பதை பற்றி இரண்டாம் பாகத்த்தில் இருக்கும். என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாதான் என் ஜாக்பாட்: ஜோதிகா நெகிழ்ச்சிசூர்யாதான் என் ஜாக்பாட்: ஜோதிகா ... கழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல: சத்யசிவா கழுகு 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in