Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்ணிய எல்லைக்குள் அடைபட விரும்பவில்லை : அமலாபால்

27 ஜூலை, 2019 - 11:05 IST
எழுத்தின் அளவு:
I-cant-restrict-in-Feminasam-says-Amalapaul

நான் பெண்ணியவாதி கிடையாது. பெண்ணியம் என்ற எல்லைக்குள், அடைபட விரும்பவில்லை. என்னால் என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்வேன், என, நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

அமலாபால் நடித்த, ஆடை படம், பலத்த சர்ச்சைக்கு மத்தியில், சமீபத்தில் வெளியானது. இப்படத்தில், அமலாபால் நடித்த, நிர்வாண காட்சிக்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளது. இந்நிலையில், படம் குறித்து, அமலாபால் அளித்த பேட்டி: ஆடை, நம் உடலை மறைப்பதற்கான பொருள். ஆனால், ஆடை படம், பல உண்மைகளை காண்பிக்கும். அனைத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை தான், இப்படத்தில் காண்பித்துள்ளோம்.

உண்மையான சுதந்திரம் என்ன என்பதையும் கூறியுள்ளோம். படத்தை பற்றி, சிலர் தவறான தலைப்புகளில், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை விட, சிறந்த படத்தை தர முடியாது. படம் குறித்து, நாங்கள் முன்பே தெளிவுப்படுத்தி விட்டோம். தவறான விளம்பரம் செய்து, படத்தை பாருங்கள் என, நாங்கள் கூறவில்லை.

இப்படத்தில், பெண்ணியம் பற்றியும் பேசவில்லை. சுதந்திரமான துணிச்சலான பெண், பைக் ஓட்டுபவள் என்பதெல்லாம், பெண்ணியம் கிடையாது. இங்கு, பெண்ணியம் என்ற வார்த்தை, தவறாக பயன்படுத்தப்படுகிறது. காமினி என்ற பெண்ணின், வாழ்க்கையில் நடந்த விஷயம் தான், இப்படம். பெண்ணியத்திற்கும், ஆடை படத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. நான் பெண்ணியவாதி கிடையாது. பெண்ணியம் என்ற எல்லைக்குள், அடைபட விரும்பவில்லை. என்னால், என்ன செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்வேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
ஊர்வசி பாடலை புதிய வரிகளில் பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்ஊர்வசி பாடலை புதிய வரிகளில் பாடும் ... நடிகையை ஆஜர்படுத்தக்கோரி தயாரிப்பாளர் ஆட்கொணர்வு மனு நடிகையை ஆஜர்படுத்தக்கோரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 ஆக, 2019 - 14:32 Report Abuse
skv srinivasankrishnaveni அவளை பெண் என்று சொன்னால் அவளை பத்துமாசம் சுமந்து பெத்தாளே அவருக்குத்தான் அவமானம் அசிங்கம் . காசுக்கு எதையும் செய்ய தயாரானவள்
Rate this:
raam -  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2019 - 21:46 Report Abuse
raam பணம்
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
27 ஜூலை, 2019 - 12:52 Report Abuse
முதல் தமிழன் You are a useless lady. Don't cheat our youngsters
Rate this:
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
27 ஜூலை, 2019 - 12:52 Report Abuse
முதல் தமிழன் You are a useless lady.
Rate this:
Girija - Chennai,இந்தியா
27 ஜூலை, 2019 - 12:38 Report Abuse
Girija பெண்களின் அவமான சின்னம்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in