Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ 1 - படத்தைப் புறக்கணிக்க வேண்டும் - தமிழ்நாடு பிராமணர் சங்கம்

26 ஜூலை, 2019 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Tamil-Nadu-Brahmana-sangam-oppose-Santhanams-A1-movie

சந்தானம் நாயகனாக நடித்து இன்று(ஜூலை 26) வெளியாகியுள்ள படம் ஏ 1. இப்படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். தாரா அலிசா பெரி என்பவர் நாயகியாக நடித்துள்ளார். பிராமணப் பெண்ணை வேறு சாதியைச் சேர்ந்த ஒரு லோக்கல் பையன் காதலிப்பதுதான் இப்படத்தின் கதை.


இந்தப் படத்தின் இரண்டாவது டீசரில் பிராமணப் பெண் ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலைச் சொல்லுவதாக ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. அதற்கு பிராமணர் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதை சீப் பப்ளிசிட்டிக்காகச் செய்கிறார்கள் என சந்தானம் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சந்தானத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, படத்தை பிராமணர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும், மற்ற சமூக நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து இயக்கங்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் சந்தானத்தின் பேச்சுக்கு அவர்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

வழக்கமாக 11.30 மணிக்குத்தான் காலை காட்சிகள் ஆரம்பமாகும். இந்த சர்ச்சையால் சந்தானம் படத்திற்கும் இலவச விளம்பரம் கிடைத்து இன்று அதிகாலை காட்சிகளும், 8 மணி காட்சிகளும் சில ஊர்களில் நடைபெற்றுள்ளன. மற்றவர்களை சீப் பப்ளிசிட்டி என்று கூறும் சந்தானம், டீசரில் வேண்டுமென்றே அந்த ஆம்லெட் காட்சியை வைத்து ஒரு சர்ச்சையைக் கிளப்பி அவர்தான் சீப் பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (52) கருத்தைப் பதிவு செய்ய
பாண்டிச்சேரிக்கு வீடு மாறிய அமலா பால் ?பாண்டிச்சேரிக்கு வீடு மாறிய அமலா ... ப.பாண்டி 2 : தனுஷ் திட்டம் ப.பாண்டி 2 : தனுஷ் திட்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (52)

Sathya Dhara - chennai,இந்தியா
02 ஆக, 2019 - 12:26 Report Abuse
Sathya Dhara கருத்து பதிவு முன் போலவே கீழே இருக்கட்டும். வலது பக்கம் நன்றாக இல்லை. தினமலர் போல தோன்றாமல் எதோ எடுபிடி வார பத்திரிகை போல் உள்ளது. இந்த கருத்து பதிவு எப்போதும் போல் கீழேயே இருக்கட்டும். ப்ளீஸ்
Rate this:
mohanamurugan - panruti,இந்தியா
31 ஜூலை, 2019 - 19:44 Report Abuse
mohanamurugan இக்கதையை எந்த வாக்கியத்தைக் கொண்டும் கூறலாம் அல்லவா?
Rate this:
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
27 ஜூலை, 2019 - 11:36 Report Abuse
Ganesan.N தமிழ் நாட்டில் ஈஸியா எந்த ஸமூஹத்தைப் பற்றி பேச மற்றும் எழுத முடியும் என்றால் அது ப்ராஹ்மண சமூகம்தான். இந்த சமூகத்திற்கு உள்ள பொறுமையும் , சகிப்பு தன்மையும் வேறு எந்த சமூகத்தாருக்கும் கிடையாது. அதனால்தான் திரு. சந்தானமும் இந்த சமூகத்தை அவமதிப்பதை ஒரு பொருட்டாக கருதவில்லை.
Rate this:
27 ஜூலை, 2019 - 11:08 Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு பட இயக்குனர் ஒரு கிருத்துவர் என்பதை மனதில் கொள்ளவேண்டும்
Rate this:
Straight Bat - Chennai,இந்தியா
27 ஜூலை, 2019 - 10:06 Report Abuse
Straight Bat I feel Brahmins are above all these. Mocking and ridiculing brahmins have been going on for years. Brahmins are sitting ducks . Since Brahmins hardly react to any of these, they continue to do it. My only reaction - let them. SInce these people are so intellectually weak they would resort to this. SO be it. All this ridicule will not affect brahmins. Brahmins know what they are. Brahmins don't need a certificate from any of these intellectually weak film makers. When we have people like Kamalahasan himself targetting brahmins, what can brahmins do ? Since these film makers cannot do a similar job on other es / communities and religions they resort to such cheap jobs of caricaturing brahmins since brahmins will not react to such things. Brahmins need to take care of their priestly duties, piety, family and education and bettering themselves rather than reacting to nonsense being portrayed in cheap films. One thing is for sure - all these caricaturing of brahmins stems from the feeling of low esteem, lack of intellect, feeling of insecurity amonst these film makers. Brahmins are generally weak in physique in view of their dietary composition and hence mocking their dietary habits gives these film makers cheap thrills. Let them enjoy. How does it affect Brahmins ??
Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in