'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீ-மேக் இது. யுவனின் இசை அமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு பாடல்களாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், அஜித்-வித்யாபாலன் இடையேயான ரொமான்டிக் பாடலான ‛அகலாதே... பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பாடலை பா.விஜய் எழுத, யுவன் ஷங்கர் ராஜா, பிரித்வி இணைந்து பாடியிருக்கின்றனர்.
கணவன், மனைவி இடையேயான காதலை வெளிப்படுத்தும் விதமாக மெலோடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்கள் இப்பாடலை வரவேற்றுள்ளனர். வெளியான 15 நிமிடங்களில் 1.50 லட்சம் பார்வைகளும், 45 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.
#Agalaathey from @nerkondapaarvai ft. #AjithKumar and @vidya_balan will release today at 6 PM! Be the first one to catch it --> https://t.co/4uoL2bhF5F@ZeeStudiosInt #HVinoth #BayViewProjects @BoneyKapoor
— Raja yuvan (@thisisysr) July 25, 2019