கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
2012ம் ஆண்டு, சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛கழுகு'. தற்போது இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் உடல்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான செந்நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் காளி வெங்கட்டும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
இப்படம் முடிவடைந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.