விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
ஒளிப்பதிவாளர் ஷமன் மித்ரு தயாரித்துள்ள படம் தொரட்டி. அவரே கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சத்யகலா, அழகு, முத்துராமன், ஜெயசீலன் உள்பட பலர் நடித்துள்ளனர். விளை நிலங்களில் ஆட்டுகிடை போட்டு பிழைக்கும் நாடோடி மக்களின் கதை.
இந்தப் படம் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போது வருகிற 2ந் தேதி வெளிவருகிறது. படத்தை வெளியிட கால்கள் தேய தெருத் தெருவாக அலைந்ததாக தயாரிப்பாளரும், நாயகனுமான ஷமன் மித்ரு வேதனையுடன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்தவன், இந்தப்படத்தை இந்து கருணாகரன் சகோதரியோடு தயாரித்துள்ளேன். இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் என் கால் படாத தெருக்கள் இல்லை. எல்லா கம்பெனிகளிலும் ஏறி இறங்கினேன். ஒரு போஸ்ட்மேனை விட எனக்கு தெருக்களும், வீட்டு கதவு எண்களும் எனக்குத் தெரியும். அந்த அளவிற்கு தெருத் தெருவாக அலைந்தேன்.
மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். திரவுபதியை துகில் உரியும் போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். அப்போது தான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன் தான் இந்தப்படத்தை வெளியிடும் எஸ்.டி.சி பிக்சர்ஸ். இந்தப்படம் இன்றைய தலைமுறை கண்டிராத கேட்டிராத ஒரு வாழ்க்கையை சொல்லும். மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும். என்றார்.