'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
மேயாதமான் படத்திற்கு பிறகு வைபவ் கதையின் நாயகனாக நடிக்கும் படம் டாணா. இதில் அவருடன் நந்திதா ஸ்வேதா, பாண்டியராஜன், உமா பத்மநாபன், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவராஜ் சுப்பிரமணி இயக்குகிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார், சிவா ஒளிப்பதிவு செய்கிறார். நோபல் மூவீஸ் சார்பில் எம்.சி.கலைமாமணி, எம்.கே.லட்சுமி தயாரிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க காமெடி படமான இதில் வைபவ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது நண்பராக யோகி பாபுவும், காதலியாக நந்திதாவும், அப்பாவாக பாண்டியராஜனும், அம்மாவாக உமா பத்மநாபனும் நடிக்கிறார்கள்.
போலீசான வைபவுக்கு ஒரு பிரச்சினை. அவர் அதிகம் கோபமோ, சந்தோஷமோ அடைந்தாலோ அவரது குரல் பெண் குரலாக மாறிவிடும். இந்த குறையை வைத்துக் கொண்டு அவர் எப்படி காதல், கடமை போன்றவற்றை சமாளிக்கிறார் என்பதுதான் கதை. படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்திருக்கிறது.