இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |
யோகி பாபு தற்போது ஹீரோவாக பார்ம் ஆகியுள்ளார். அவர் ஹீரோவாக நடித்த தர்மபிரபு, கூர்கா படங்கள் வெளிவந்துள்ளது. ஜோம்பி, பன்னி குட்டி, படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்த நிலையில் மண்டேலா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் பாலாஜி மோகன், ஒய் நாட் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரிக்கிறார். புதுமுகம் மடோன் ஆஸ்வின் இயக்குகிறார். யோகிபாபுவுடன் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்கள். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்கிறார், பரத் சங்கர் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்புகள் ஒரே கட்டடாக குற்றாலம், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் நடக்கிறது. இது கிராமத்தை மையமாக கொண்ட காமெடி படம். யோகிபாபு முடிதிருத்தும் தொழிலாளியாக நடிக்கிறார்.