Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

யார் யாருக்கு என்ன பதவி? : பட்டியல் போட்ட கங்கனா

24 ஜூலை, 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Kangana-Ranaut-about-ministry-to-actors

தமிழில் முதல் முதலில் தாம் தூம் படத்தில் நடித்து, நடிகையாக அறிமுகம் ஆனவர் கங்கனா ரணாவத். அவர், அதன் பின் தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்தி படங்களில் நடிக்கப் போய் விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் இயக்குநர் ஏ.எல்.விஜய் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தலைவி என்ற அந்தப் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடிக்கிறார்.

இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் கங்கனா. அப்பேட்டியில், நீங்கள் இந்தியாவின் பிரதமர் என்றால், துறை அமைச்சர்களாக யாரை நியமிப்பீர்கள்? அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி பதில் கேட்டுள்ளனர்.

வம்படியாக எதையாவது சொல்லி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் கங்கனா, இந்தப் பேட்டிக்குப் பின்னும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதற்கு காரணம் - பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான்.

*நடிகர் அக்ஷய் குமார் மது அருந்த மாட்டார்; புகை பிடிக்க மாட்டார். அதனால், அவருக்கு சுகாதாரத் துறையை அளிப்பேன்.

*நடிகை கரீனா கபூர் வீட்டையும் மிகச் சிறப்பாக கவனித்துக் கொண்டு, சினிமாவிலும் சிறப்பாக நடித்து வருகிறார். அவருக்கு அதனாலேயே உள்துறை அமைச்சகத்தைக் கொடுக்கலாம்.

*நடிகர் ஷாரூக்கான், பணக்கார நடிகர்களில் முக்கியமானவர். சொந்தமாக ஸ்டூடியோ வைத்திருக்கிறார்; நிறைய சொத்துக்களும் வைத்திருக்கிறார். அதனால், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும்; அதை எப்படி செலவழிக்க வேண்டும் என்பது அவருக்கு அத்துப்படியாகத் தெரியும். அதனால், அவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

*நன்றாக புறம் பேசுவார்; பெண்களிடம் தகாத வார்த்தைகளைப் பேசுவார். இதற்காகவே, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவர் வேறு யாருமல்ல... தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் தாப்பர். அவரிடம் தகவல் ஒளிபரப்புத் துறையைக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். அவரைத் தவிர, வேறு யாராலும், அந்தத் துறையை மிக சிறப்பாக கவனித்து வழி நடத்த முடியாது.

*யாருக்கும் தெரியாமல் பி.ஆர்., குழு ஒன்றை அமைத்துக் கொண்டு அடுத்தவர் விவரங்களையெல்லாம் ரகசியமாக சேகரித்து வருகிறார். அதை வைத்து, மற்றவர்களின் பெயரைக் கெடுக்கிறார். மிக எளிதாக அடுத்தவர் முதுகில் குத்துகிறார். அதனால், அவருக்கு பாதுகாப்புத் துறையைக் கொடுத்து விடலாம்.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஞ்ஞானி ஆன நித்யாவிஞ்ஞானி ஆன நித்யா டியர் காம்ரேட், ஹிந்தி ரீமேக்கை வாங்கிய கரண் ஜோஹர் டியர் காம்ரேட், ஹிந்தி ரீமேக்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in