Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துளிர் விடும் சூர்யாவின் அரசியல் ஆசை!

24 ஜூலை, 2019 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Suriya-next-move-to-Politics

நடிகர் சூர்யா, சமீப காலமாக அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருவது தெரிகிறது. அவர் என்.ஜி.கே., படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களம் கொண்ட படம் தான். காட்சி அமைப்புகள் சரிவர எடுக்கப்படாததால், மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது.

இது நடிகர் சூர்யாவுக்கு, சினிமாவைப் பொறுத்த வரையில் பெரும் பின்னடைவுதான். என்றாலும், அரசியலில் தனக்கும் தீவிர ஆர்வம் இருக்கிறது என்பதை, அந்தப் படம் தெள்ளத் தெளிவாக வெளியுலகிற்கு எடுத்துச் சொன்னது என்பதில், சூர்யாவுக்கு சந்தோஷம் தான்.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையெல்லாம் ஆழ்ந்து படித்துக் கொண்ட நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மிகக் கடுமையாகப் பேசினார்.

என்ன மயிருக்கு இதெல்லாம் செய்கிறார்கள் என்றெல்லாம், மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நடிகர் சூர்யா பேசினார். அவர் என்ன பேசினாரோ, அதே போலவே, பேச்சுக்குப் பின் விளைவுகள் உருவாகி இருக்கின்றன. பா.ஜ.,வினர் நடிகர் சூர்யாவை கடுமையாக விமர்சிக்கத் துவங்கி இருக்கின்றனர். அ.தி.மு.க.,வின் அமைச்சர் பெருமக்களெல்லாம், நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என கேலியும்; கிண்டலும் செய்து பேசுகின்றனர்.

ஆனால், நடிகர் சூர்யா தொட்ட சமாச்சாரம் மிக ஆழமானது. இது கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபலமான ஒரு சினிமாக்காரராக இருந்து, அவர் என்ன பேசினாலும், அது மிக விரைவில் மக்களை சென்றடைந்து விடும் என்பதற்கு, சமீபத்திய சூர்யாவின் பேச்சும் மிகச் சிறந்த உதாரணம்.

பா.ஜ., தரப்பிலான எதிர்ப்புக்குப் பின்னும், நடிகர் சூர்யா தன்னுடைய பேச்சில் இருந்து பின் வாங்கவில்லை. மாறாக, தன்னுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மையம் தலைவர், நடிகர் கமல், ரஜினி என பலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி இருக்கிறார். ஆக, தான் பேசிய அந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும், தொடர்ந்து அதிலேயே பயணிக்கப் போவது போலவும் சூர்யாவின் தொடர் செய்கைகள் அமைந்துள்ளன.

இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செய்கைக்குப் பின்னும் தீவிரமான அரசியல் கணக்குள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தான் அரசியலுக்கு வந்தால், அது சரியாக இருக்குமா என்பது குறித்து அறிய விரும்பும் சூர்யா, இதற்காகவே, புதிய கல்விக் கொள்கை குறித்த சர்ச்சையான பேச்சை பேசி, ஆழம் பார்க்கத் துவங்கி இருக்கிறார் என்பதுதான், அரசியல் நோக்கர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது.

அதற்கேற்ப, நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், அவரின் 44வது பிறந்த நாளுக்கு தமிழகம் முழுக்க எழுதி வைத்திருக்கும் சுவர் விளம்பரங்களில், சூர்யாவை அரசியலுக்கு அழைத்து எழுதி வைத்துள்ளனர். சூர்யாவை பெரியாரோடு ஒப்பிட்டு, சூர்யாவை பெரியார் ஆக்கி படம் வரைந்துள்ளனர். சுவர் விளம்பரங்களில் சூர்யா படத்துக்குப் பின் காமராஜர், அப்துல் கலாம் படங்களை எல்லாம் வரைந்திருக்கின்றனர்.

ஆக, ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் ரசிகர்களைப் போல, அவர்களது ரசிகர்களின் ஆதர்ஷமாக விளங்கும் நடிகர்கள், அரசியலுக்கு வர அழைப்பது போல, சூர்யா ரசிகர்களும் சூர்யாவை அரசியலுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆக, ரசிகர்களின் விருப்பத்தையும் சூர்யா, இதன் மூலம் அறிந்து கொண்டாகி விட்டது.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் எதை செய்தாலும், அதை திட்டமிட்டுத்தான் செய்வர். அதே போலத்தான், நடிகர் சூர்யாவும், ஆழமான விஷயங்களைப் பேசத் துவங்கி இருப்பது அரசியல் அரிதாரத்துக்கான பிள்ளையார் சுழியாகக் பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (41) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு வழியாக 26ந் தேதி திரைக்கு வருகிறது நுங்கம்பாக்கம்ஒரு வழியாக 26ந் தேதி திரைக்கு ... இருட்டு: இஸ்லாமிய மரபுபடி உருவாகும் திகில் படம் இருட்டு: இஸ்லாமிய மரபுபடி உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (41)

anbu - muscat,ஓமன்
28 ஜூலை, 2019 - 20:32 Report Abuse
anbu நல்ல நடிகன் என்ற முறையில் சூர்யா வளரட்டும் வாழ்த்துக்கள் . விவேக்குக்கு உள்ள எண்ணம் கூட இவருக்கு வரவில்லையே . ஒரு ஹீரோ என்ற முறையில் அரசு ஸ்கூல்கள் மூடும் நிலையில் உள்ளதை சினிமாக்களில் அவலங்களை கட்டி மக்களுக்கு குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அறிவுறுத்தலாம் மேலும் தானும் முன் உதாரணம் ஆகலாம். மாணவச்செல்வங்களை ரவுடிகழக சித்தரிக்கும் படங்களை வெளி வர விடாமல் செய்யலாம். படிக்காத ரௌடிகள் மீது காதல் செய்ய ஹீரோயின்களை கட்டாயப்படுத்தும் படங்களை விமர்சித்து வெளியிடாமல் தவிர்க்கலாம்.
Rate this:
Muthu M - Chennai,இந்தியா
25 ஜூலை, 2019 - 11:09 Report Abuse
Muthu M யாராவது அரசை பற்றி விமர்சித்தால் அவருக்கு அரசியல் ஆசை அது இது என்று கிளப்பி விட்டு அவர்மீது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவது தான் உங்கள் வேலை .
Rate this:
Vijaya Raghav - chennai,இந்தியா
25 ஜூலை, 2019 - 10:39 Report Abuse
Vijaya Raghav அதற்காகத்தான் இந்த பொறுக்கி மத்திய அரசாங்க சலுகைகளை பற்றி உறழுகிறது. இவன் பிள்ளைகள் அரசாங்க பள்ளியிலா படிக்கிறார்கள் தமிழ் வழி கழிவியிலா பயிலுகிறார்கள் முதலில் இவன் முதுகில் உள்ள அழுக்கை துடைத்து விட்டு மத்திய அரசாங்கத்தை பற்றி பேச வேண்டும்
Rate this:
Appan - London,யுனைடெட் கிங்டம்
25 ஜூலை, 2019 - 09:55 Report Abuse
Appan தமிழகத்தில் கல்வி குறித்து கருத்து சொல்லும் முழு அதிகாரம் சூர்யாவிற்குத்தான் உள்ளது..இவர் அகரம் பவுண்டேசன் நிறுவி சுமார் மூவாயிரம் பேருக்கு உயர் கல்வி தருகிறார்கள்.. அதுவும் சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களை தேர்ந்து எடுத்து உன்னதமான சமூக சேவையை செய்கிறார்கள்..
Rate this:
Chandrasekar Ganesh - coimbatore,இந்தியா
25 ஜூலை, 2019 - 08:34 Report Abuse
Chandrasekar Ganesh சூலூர் தொகுதியில் நிற்பார்
Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in