Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியேறியது ஏன் : ஜெகபதிபாபு விளக்கம்

23 ஜூலை, 2019 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Jagapathi-babu-replied-why-he-out-from-Mahesh-Babu-film

மகேஷ்பாபு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'சரிலேறு நீக்கெவரு'. அனில்ல் ரவிபுடி என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ஜெகபதிபாபு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.. இந்த நிலையில் சமீபத்தில் ஜெகபதிபாபு இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார் என இயக்குனர் அனில் ரவிபுடி அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டார்..

இதைத்தொடர்ந்து ஜெகபதிபாபு வெளியேறியதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லி சோசியல் மீடியாவில் புதுப்புது கதைகள் கிளம்பின. இதையடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கமளித்து நடிகர் ஜெகபதிபாபு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “சினிமா என்பது என்னுடைய குடும்பம் போல.. அதனால் உள்ளே நடக்கும் விஷயங்களை நான் பெரிதாக வெளியில் பகிர்ந்து கொள்வதில்லை.. ஆனால் என்னுடைய 33 வருட திரையுலக வாழ்க்கையில் இப்போதுதான் நான் முதன்முறையாக என்னுடைய விஷயம் குறித்த ஒரு விளக்கத்தை வெளியில் சொல்லும் சூழல் உருவாகி இருக்கிறது..

இந்த படத்தில் நான் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தை ரொம்பவே விரும்பினேன்.. இந்த படத்திற்காக இன்னும் இரண்டு படங்களைக்கூட வேண்டாம் ன ஒதுக்கினேன்.. இப்போதும் கூட அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகத்தான் இருக்கிறேன்.. ஆனால் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்கிற ஒரு சூழல் உருவானது.. இருந்தாலும் இந்த படத்தையும் படக்குழுவினரையும் நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்

ஆக. இப்படி தான் விரும்பி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தையே வேண்டாம் என கூறி, ஜெகபதிபாபு வெளியேறும் அளவிற்கு மிகவும் கடுமையாக ஏதோ ஒரு நிகழ்வு அவரை பாதித்து இருக்கிறது என்பதையும் அதை இருதரப்பினருமே வெளியில் சொல்ல விரும்பவில்லை என்பதையுமே ஜெகபதிபாபுவின் விளக்கம் சுட்டிக் காட்டுகிறது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த நாகார்ஜுனாமன்மதடு 2 இயக்குனரை பிராங்க் செய்த ... ராஷ்மிகா பேச்சுக்கு கன்னட நடிகர் கண்டனம் ராஷ்மிகா பேச்சுக்கு கன்னட நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in