Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் கிளம்பிய திடீர் எதிர்ப்பு

23 ஜூலை, 2019 - 14:47 IST
எழுத்தின் அளவு:
Trouble-for-Rashmika-Mandanna-movie-in-Kannadam

கீதா கோவிந்தம் என்கிற ஒரே படத்திலேயே, ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் டியர் காம்ரேட்ஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா.. விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராஷ்மிகாவுக்கு கர்நாடகாவில் புதிய சிக்கல் ஒன்று கிளம்பியுள்ளது.

அதாவது முதலில் இந்தப்படம் தெலுங்கில் மட்டுமே எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது அதன் பின்னர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு நான்கு மொழிகளில் வெளியாகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியின்போது, ராஷ்மிகாவிடம் கன்னட மொழியில் பேசுவது உங்களுக்கு ரொம்ப சுலபமாக இருந்திருக்குமே என கேட்கப்பட்டது அதற்கு உடனே “இல்லை இல்லை கன்னடத்தில் டப்பிங் பேசுவது எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றார்.

கார்நாடகாவிலேயே பிறந்து, வளர்ந்தவரான ரஷ்மிகா இப்படிக் கூறியது கன்னட மொழி ஆதரவாளர்களிடம் கோபத்தைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து 'பாய்காட் டியர் காம்ரேட்' என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி, கர்நாடகாவில் இந்த படத்தை திரையிடக்கூடாது.. அப்படியே திரையிட்டாலும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க கூடாது என்று கூறுமளவிற்கு எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பெங்களூரில் இருந்து சென்னைக்கு சைக்கிளில் வந்த ஆர்யாபெங்களூரில் இருந்து சென்னைக்கு ... வனிதாவிற்கு உதவிய விஜய் வனிதாவிற்கு உதவிய விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in