Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் இமேஜைக் காப்பாற்றிய சிவகுமார்

23 ஜூலை, 2019 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Sivakumar-saves-Rajini-image

தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வில்லனாக, இரண்டாவது கதாநாயகனாக நடித்த படங்கள் உள்ளன. அவற்றில் சிவகுமாருடன் அவர் இணைந்து நடித்த கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய படங்கள் முக்கியமானவை.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் சிவகுமாரை விடவும் அதிகப் பெயர் வாங்கியவர் ரஜினிகாந்த். அந்தப் படங்களில் சிவகுமாருடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றியும், தன் இமேஜ் கெடக்கூடாது என்பதற்காக சிவகுமார் செய்த விஷயத்தைப் பற்றியும், காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“கவிக்குயில் பட ஷூட்டிங்ல அந்தப் படத்தோட கதாநாயகிகள் ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி ரெண்டு பேர் கிட்டயும் பேசிக்கிட்டே இருப்பேன். அதைப் பார்த்து சிவகுமார், எப்பப் பார்த்தாலும் பொன்னுங்க்கிட்டயே பேசிட்டு இருக்கியே, புத்தகம் ஏதாவது படிக்கலாமில்லையான்னு திட்டுவாரு.

அப்புறம் புவனா ஒரு கேள்விக்குறி பட ஷுட்டிங் சமயத்துல படத்தோட ஹீரோயின் சுமித்ராகிட்ட பேசிட்டிருப்பேன். ஒரு நாள் ஒரு உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து, ஈவ்னிங் அந்த காட்சியை எடுப்போம் படிச்சிக்கோங்கன்னு சொன்னாரு. நானும் அப்புறம் அதையே மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.

சிவகுமார் வந்து படத்துல அப்படி ஒரு சீன் எதுவுமில்லை. நீ ரொம்ப நேரமா சுமித்ரா கூட பேசிட்டிருந்த, யாராச்சும் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கினு சொல்லிடக் கூடாது இல்லையா, அதான் இப்படி பண்ணேன் எனச் சொன்னாரு. எனக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னு என்னைப் பார்த்துக்கிட்டவரு அவரு,” என ரஜினிகாந்த் பேசிய போது அரங்கில் சிரிப்பலையும், கைத்தட்டல்களும் ஒன்றாய் எழுந்தன.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
ரூ.40 கோடியை நெருங்கும் சமந்தாவின் 'ஓ பேபி' வசூல்ரூ.40 கோடியை நெருங்கும் சமந்தாவின் 'ஓ ... அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த லதா ரஜினி அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Vaduvooraan - Chennai ,இந்தியா
30 ஜூலை, 2019 - 11:01 Report Abuse
Vaduvooraan இதே சிவகுமார் தனது சுயசரிதையில் புவனா ஒரு கேள்விக்குறி படத்துக்காக தன்னை விட ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுத்து பெரீஸ்ஸா கட்அவுட் வெச்சி தன் படத்தை சின்னதா போஸ்டர்ல போட்டது பத்தி புலம்பி தள்ளியிருந்தார். இன்னிக்கு ரஜினி சிவகுமார் பத்தி ஆஹா ஓஹோன்றாரு சினிமாக்காரங்க.. அப்படித்தான் அடிச்சுப்பாங்க...அப்புறமா கட்டி புடிச்சு போட்டோ எடுத்து போடுவாங்க..கேட்டா கலைக்குடும்பம் என்று ஒரே போடா போடுவாங்க. இதெல்லாம் போயி சீரியசா எடுத்துட்டே தமிழன் காலம் ஓடிருச்சு
Rate this:
oce - tokyo,ஜப்பான்
25 ஜூலை, 2019 - 07:36 Report Abuse
oce நேர் கோண்ட பார்வை படப்பிடிப்பில் தமது பின்பக்க நீண்டு வளர்ந்த கட்டிய முடியுடன் ரஜினி சிவகுமாரை சந்திக்கிறாரா. அடுத்து கட்சியை இதே தோற்றத்தில் ஆரம்பித்தால் தொண்டர்களும் குடுமி முடியில் உலா வரலாம்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
24 ஜூலை, 2019 - 11:20 Report Abuse
JMK உள்ளூர்லயே நேஅர் கொண்ட பார்வை விலைபோகவில்லை இதை சீனாவிலே விலை போகுமா ? ஒரு வாரம் தாங்காது ?
Rate this:
JMK - Madurai,இந்தியா
24 ஜூலை, 2019 - 11:08 Report Abuse
JMK ரஜினியை தவிர 2.0 யார் நடிச்சாலும் நுறு கோடி தாண்டியிருய்க்காது? விஜய் / அஜித் நடித்திருந்தால் படம் ஒரு வாரம் ஓடியிருக்காது என்பது லைக்கா தயாரிப்பாளருக்கு நன்றாகவே தெரியும் ? 23-ஜூலை-2019 12:06:15 IST
Rate this:
Suri - Chennai,இந்தியா
24 ஜூலை, 2019 - 09:06 Report Abuse
Suri இல்லைன்னா மட்டும் ரொம்ப யோக்யம். ஓட்டை விழுந்த பலூன்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in