தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் |
லைகா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா பொம்மன் இராணி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கும் படம் 'காப்பான்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் இப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 21-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 30-ஆம் தேதி 'காப்பான்' படம் வெளியாக இருக்கிறது. 'காப்பான்' படத்தில் மோகன்லால் பிரதமராகவும், இவரது பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை முன்னணி டி.வி. நிறுவனம் வாங்கியுள்ளது. ஓவர்சீஸ் உரிமத்தை பார்ஸ் பிலிம் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஆடியோ வெளியீட்டுக்கு முன்னதாகவே இப்படத்தின் 'சிறிக்கி...' என்ற பாடல் வெளியானது. அப்பாடல் சூர்யா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஞானகரவேல் என்ற கவிஞர் எழுதிய சிறிக்கி பாடலின் பல்லவியில் படு ஆபாசமாக வரிகள் இடம்பெற்றுள்ளன.
அதுமட்டுமல்ல, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளும் அந்தப்பாடலில் உள்ளன. இந்தப்பாடலுக்கு சூர்யா எப்படி வாயசைத்து நடித்தார் என்று புரியவில்லை. ஒரு பக்கம் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். சமூகப்பிரச்சனைகள் பற்றி எல்லாம் பேசுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் பெண்களை இழிவுபடுத்தும், ஆபாசமான பாடல் காட்சியில் அவரே நடிக்கிறார்.