தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | ஆன்மிக அழைப்பில் சுபிக்ஷா | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் |
திருமணத்துக்குப் பின் கொஞ்ச காலம் நடிக்காமல் இருந்த நடிகை ஜோதிகா, தற்போது முழுநேர நடிகையாக மாறி இருக்கிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, அவர் நடித்திருக்கும் ஜாக்பாட் படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதால், அந்தப் படத்துக்கான் புரமோஷன் வேலைகள் துவங்கி இருக்கின்றன. படம் சென்சாருக்குச் சென்று யு சான்றும் வாங்கி விட்டது.
ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் பிறந்த நாள் இன்று(ஜூலை 23), கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜாக்பாட் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். சூர்யாவுக்கு பிறந்த நாள் பரிசளிக்கலாம் என ஜோதிகா கூறியதால் வெளியிட்டுள்ளனர்.