Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பொன்னியின் செல்வன்' ரஜினிகாந்த் கொடுத்த தகவல்

22 ஜூலை, 2019 - 19:11 IST
எழுத்தின் அளவு:
Rajini-gave-update-about-Ponniyin-Selvan

மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' படம் தயாராகப் போவதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. நடிகை ஐஸ்வர்யா ராய் சில மாதங்களுக்கு முன்பு தான் படத்தில் நடிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகே படம் கண்டிப்பாகத் தயாராகும் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது.

இருப்பினும், அடுத்தடுத்து படத்தில் இவர் நடிக்கப் போகிறார், அவர் நடிக்கப் போகிறார் என பல நடிகர்கள், நடிகைகளைப் பற்றி தகவல்கள் வந்து கொண்டேயிருந்தன. அதேசமயம், படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது பற்றியும் சில குழப்பமான சூழல் இருந்தது.

இப்போது படத்தை தயாரிக்கப் போவது லைகா நிறுவனம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதை 'காப்பான்' திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

“எம்ஜிஆர் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் உருவாக்க நினைத்த 'பொன்னியின் செல்வன்' படத்தை சுபாஷ்கரன் தயாரிக்க உள்ளார். வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை கேரக்டர்களை திரையில் பார்க்க ரொம்ப ஆவலாக உள்ளேன்,” எனப் பேசினார்.

ரஜினிகாந்த் பேச்சில் 'பொன்னியின் செல்வன்' பற்றிய தகவல் வந்ததால் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து ஒரு நடிகைராஜ்குமார் குடும்பத்தில் இருந்து ... அரசியல் படத்தில் கமல் அரசியல் படத்தில் கமல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Suri - Chennai,இந்தியா
23 ஜூலை, 2019 - 10:12 Report Abuse
Suri எதோ ஒன்று எழுதி பரட்டையை ஒளி பாய்ச்சலில் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும்??? இந்த காற்று போன பலூனை இன்னும் எவ்வளவு ஊதி விடுவீர்கள்??
Rate this:
கோமாளி - erode,இந்தியா
23 ஜூலை, 2019 - 07:51 Report Abuse
கோமாளி லைகா நிறுவனத்தை எதிர்த்த 'தமுல் குரூப்' எல்லாம் எங்கே காணோம்??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in