Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஆடை அமலாபால்

22 ஜூலை, 2019 - 13:10 IST
எழுத்தின் அளவு:
amala-paul-special-interview-for-dinamalar

'சிந்து சமவெளி'யில் கால்பதித்து ரசிகர்களின் இதயச் சமவெளிகளில் பரவி மயக்கும் விழிகள், இழுக்கும் இதழ்களால் நடிப்பில் நளினம் காட்டிய அமலா பால் 'ஆடை'யில் பரபரப்பான காட்சிகளில் கட்சிதமாக நடித்து பல விமர்சனங்களை எதிர் கொண்டது குறித்து இங்கே மனம் திறக்கிறார்...

* 'ஆடை'யில் நடிக்க சம்மதித்தது ?
சினிமா வேண்டாம் என நினைத்த நேரத்தில் தான் இந்த கதையை கேட்டேன். ஒரே மாதிரி பொய்யான கேரக்டர்களில் பல படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு மாற்றம் தேவைப்பட்டதால் இதில் நடிப்பதை சவாலாக எடுத்துக் கொண்டு சம்மதித்தேன். வாழ்வா சாவா என்ற போராட்டத்தின் வெளிப்பாடு தான் இப்படம்.


* படத்தில் உங்கள் கதாபாத்திரம்?


'காமினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நுாறு கி.மீ., வேகத்தில் பைக் ஓட்டுவது, காட்சிகளில் எப்போதும் என்னுடன் ஆண்கள் இருப்பது, ஹேர் ஸ்டைல், அணியும் ஆடை,


ஆண்களிடம் பேசும் விஷயம் என அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். முழுக்க முழுக்க என்னை மாற்றி நடித்த படம்.


* ஆடை படத்துக்கு உங்கள் மெனக்கெடல் ?


இயக்குனர் கூறியதால் ஆறு கிலோ எடை குறைத்தேன். ஐப்ரோ எடுக்கவில்லை. மேக்கப், லிப்ஸ்டிக் போடவில்லை. ஒரிஜினலாக நானே சண்டைக் காட்சிகளில் நடித்து இருக்கேன்.


* ஆடை படத்திற்கு தயாரான விதம் ?
அப்பாவிடம் டிரஸ் இன்றி நடிக்க வேண்டும் என கூறினேன். கொஞ்சம் ஷாக் ஆன பின் கதை நல்லா இருக்கான்னு கேட்டு விட்டு சம்மதித்தார். நடிக்கும் முன் 'நாய் வேஷம் போட்டா நீ குலைத்து தான் ஆகணும்'ன்னு அப்பா கூறினார். நடிக்க சம்மதித்த பின் 100 சதவீதம் உடல், மன ரீதியாக தயாரானேன்.


* ஆடை படத்திற்கு பின் ஏற்பட்ட மாற்றம்?
நடித்து முடித்த பின் எனக்குள்ள ஒரு பெரிய சக்தி வந்தது. என் நடிப்பை அதுவும் ஆடையின்றி நடித்ததை உலகமே பார்க்குமேங்குற விஷயம் மனசுக்குள்ளே ஓடிகிட்டே இருக்கும். சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. என் உடம்பை எனக்கு ரொம்ப பிடித்தது.


* தயாரிப்பாளர் ஆனது எப்படி ?


ஆடை படம் கொடுத்த நம்பிக்கையில் தான் 'கடாவல்' படத்தை தயாரிக்க முன் வந்தேன். பிணக் கிடங்கின் பின்னணியில் உள்ள ஒரு கதையில் ரித்விகா, அதுல்யா ரவி உடன் நானும் நடித்துள்ளேன். இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அக்டோபரில் வெளியாகும்.
* ஆடையின்றி நடித்த போது மனநிலை
படத்தில் ஒரு மணி நேரம் ஆடையின்றி நடித்தேன். நடிக்கும் போது அதிக ஆட்கள் உள்ளே வர மாட்டார்கள். 15 பேருக்கு மேல் அந்த இடத்தில் அனுமதியில்லை. பல கட்டுப்பாடுகளுடன் தான் அந்த காட்சியை படமாக்கினார்கள்.


* தனிப்பட்ட வாழ்க்கை ?
யோகா, தியானம் என ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். குழந்தைகள் என்றால் பிடிக்கும். அந்த வாழ்க்கை வாழ நிச்சயம் திருமணம் செய்வேன்.
* இதுவரை கற்ற விஷயங்கள் ?
தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களால் நிறைய நட்புகளை இழந்தேன். அவ்வளவு தான் இனி அமலா பால் எழுந்து வர முடியாது என்ற சூழல் இருந்தது. அத்தனையும் கடந்து மீண்டு வந்தேன். வாழ்க்கை போகும் போக்கில் போகிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் சண்டைக்கோழி தான் : வனிதா விஜயகுமார்நான் சண்டைக்கோழி தான் : வனிதா ... படங்களின் எண்ணிக்கையை கணக்கு வைத்தால் வேலைக்கு ஆகாது: கிருஷ்ணா படங்களின் எண்ணிக்கையை கணக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in