Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்கு பிக்பாஸ் 3, போட்டியாளர்கள் யார், யார் ?

22 ஜூலை, 2019 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Who-are-all-the-contestant-in-Biggboss-Telugu-3

தெலுங்கில் பிக்பாஸ் 3 சீசன் நேற்று முதல் ஸ்டார் மா டிவியில் ஆரம்பமானது. நடிகர் நாகார்ஜுனா முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இதற்கு முன் நடந்த இரண்டு பிக்பாஸ் சீசன்கைளையும் ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

தெலுங்கு பிக்பாஸ் 3 சீசனில் மிகவும் பிரபலமானவர்கள் என யாரும் இல்லை. தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் என்று பார்த்தால் ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' படத்தை இயக்கியவரும், பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றிய பாபா பாஸ்கர் மட்டும்தான் இருக்கிறார். அடுத்து தமிழில் 'எட்டுத்திக்கும் மதயானை' படத்தில் நாயகியாக அறிமுகமான ஸ்ரீமுகி இருக்கிறார். அதன் பின் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

அவர்களைத் தவிர நடிகர்கள் ரவிகிருஷ்ணா, அலி ரெசா, மகேஷ் விட்டா, நடிகைகள் ஹேமா, ஹிமஜா, ரோகிணி, புர்னர்னவி பூபாலம், பாடகர் ராகுல் சிப்லிகுன்ச், நடிகர் வருண் சந்தேஷ், அவரது மனைவி வித்திகா ஷெரு மற்றும் டிவி பிரபலங்கள் சிவஜோதி, ஜாபர், சோஷியல் மீடியா பிரபலம் அஷு ரெட்டி என 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

நாகார்ஜுனா நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகிறார்கள். தமிழிலும், தெலுங்கிலும் மூன்றாவது சீசன் வந்தாலும் தமிழைப் போல, தெலுங்கு பிக் பாஸ் பரபரப்பாகவும், பிரபலமாகவும் அமையவில்லை என்பதே உண்மை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அக்னிப் பரீட்சையில் 67 வயது இயக்குனர்அக்னிப் பரீட்சையில் 67 வயது இயக்குனர் இட்டிமானி படத்தில் இருவேடங்களில் மோகன்லால் இட்டிமானி படத்தில் இருவேடங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in