ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
தமிழில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் 96 படம் தவிர மற்றவை வசூல் ரீதியாகவும் பொழுதுபோக்கு ரீதியாகவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.. வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுக்கிறேன் என அவர் ரசிகர்களை மனதில் கொள்ளாமல் படங்களை தேர்ந்தெடுப்பது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் மலையாள திரையுலகிலும் மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஜெயராம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி, இந்த படத்தின் கதையாலும் கதாபாத்திரத்தலும் ஈர்க்கப்பட்டு தான் இந்த படத்தில் நடித்ததாக ரிலீசுக்கு முன்பு கூறியிருந்தார்.
சமீபத்தில் வெளியான இந்தப் படம் மிகப் பெரிய தோல்விப் படமாக அமைந்துவிட்டது. சொல்லப்போனால் கேரளாவில் ஒரு வார மொத்த வசூலே 1.3 கோடி தான் என்றால் படம் எந்த அளவிற்கு தோல்வி என்பதை உணர முடியும்.. மற்றபடி இந்த படத்தின் கதாநாயகனாக நடித்த ஜெயராமுக்கு வரிசையாக தொடரும் தோல்விகளில் இது இன்னொரு தோல்வி.. அவ்வளவுதான்..