சர்வதேச திரைப்பட விழாவில் மோதும் 12 தமிழ் படங்கள் | இயக்குனர்கள் என் உழைப்பை தின்கிறார்கள்: எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தி கோபம் | இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனரும், ஆக்ஷன் படங்களின் பிதாமகன் என்று சொல்லப்படுபவருமான இயக்குனர் ஜோஷி மிகப்பெரிய சோதனையான காலகட்டத்தில் தான் இருக்கிறார்.. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள 67 வயதான ஜோஷி, தற்போது மலையாள சினிமாவில் குணச்சித்திர நடிகரான ஜோஜு ஜார்ஜ் என்பவரை வைத்து பொரிஞ்சு மரியம் ஜோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த வீரரை ரஞ்சி கோப்பையில் ஆடச்சொன்னால் எப்படி இருக்குமோ அந்த நிலையில்தான் தற்போது இயக்குனர் ஜோஷியும் இருக்கிறார்.. காரணம் இதுநாள் வரை அவர் இயக்கிய படங்களில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, பிருத்விராஜ் என முன்னணி நடிகர்களை தவிர வேறு எந்த அறிமுக நடிகர்களையோ சிறிய நடிகர்களையோ வைத்து படம் இயக்கியதே இல்லை..
எப்போதுமே சீனியர் நடிகர்களின் மோஸ்ட் வான்ட்டட் லிஸ்டில் இடம் பெற்ற இவர் தற்போது அக்னிப் பரீட்சையாக இந்த சிறிய பட்ஜெட் படத்தை, சிறிய நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார். அந்தவகையில், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் நுழையும் ஜோஷி கைநழுவிய தனது இடத்தை உறுதி செய்வார் என்று நம்பலாம்.