Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனர் சங்க தேர்தல் : ஆர்.கே.செல்வமணி வெற்றி

21 ஜூலை, 2019 - 17:47 IST
எழுத்தின் அளவு:
r.k.selvamani-won-in-tamil-directors-association-president-election

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் இன்று (ஜூலை 21) நடந்தது. இதில் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வணி வெற்றி பெற்றுள்ளார்.

பாரதிராஜா, இயக்குனர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை வடபழநியில் இயக்குனர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், வித்யாசாகரும் போட்டியிட்டனர்.


இதில் இயக்குனர்கள் ஷங்கர், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், சீமான், விக்ரமன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


மொத்தம் பதிவான 1503 ஓட்டுக்களில் 1366 ஓட்டுக்கள் பெற்று ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வித்தியாசாகர் 100 ஓட்டுக்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார்.


வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு


இடம்:-


ஆற்காடு சாலை


சினி மியூசிக் சங்க அரங்கம் .


வடபழனி..


தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.R.K.செல்வமணி


அவர்கள் பெற்ற ஒட்டுக்கள் 1386



தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் திரு.வித்யாசாகர்


அவர்கள் பெற்ற ஒட்டுக்கள் 100,


திரு.R.K.செல்வமணி தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


முன்பே..


பொதுச் செயலாளர்


திரு. R.V.உதயகுமார்​​​​​


பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியில்லாததால் திரு. R.V.உதயகுமார் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


முன்பே...


திரு. M.பேரரசு​​​​​


பொருளாளர் பதவிக்குப் போட்டியில்லாததால் திரு.M.பேரரசு பொருளாளர் பதவிக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது


துணைத்தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:


1) திரு. K.S.ரவிக்குமார் - 1289


2) திரு.S ரவிமரியா - 1077


3) திரு.வேல்முருகன் - 442


துணைத் தலைவர் பதவிக்கு திரு.K.S ரவிக்குமார் மற்றும்


திரு. ரவிமரியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.


இணைச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:


1) திரு. சுந்தர் C - 1271


2) திரு. ஏகம்பவாணன் - 1182


3) திரு. லிங்குசாமி - 1157


4) திரு.சித்ரா லட்சுமணன் - 990


5) திரு.ராஜா கார்த்திக் - 740


6) திரு. நாகராஜ் மணிகண்டன் - 196


இணைச் செயலாளர்கள் பதவிக்கு திரு. சுந்தர் C, திரு. ஏகம்பவாணன்,


திரு. லிங்குசாமி,


திரு.சித்ரா லட்சுமணன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.


12 செயற் குழு உறுப்பினர்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அஜீத்தின் நேர்கொண்ட பார்வை தீம் சாங் வெளியானதுஅஜீத்தின் நேர்கொண்ட பார்வை தீம் ... புதிய கல்வி கொள்கை - சூர்யா பேசினாலும் மோடி கேட்பார் : ரஜினி புதிய கல்வி கொள்கை - சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24 ஜூலை, 2019 - 03:53 Report Abuse
skv srinivasankrishnaveni வெரி குட் வாழ்த்துக்கள்
Rate this:
Selva - CHENNAI,இந்தியா
22 ஜூலை, 2019 - 02:03 Report Abuse
Selva வாழ்த்துக்கள் " வாழ்க வளமுடன்"
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in