மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
பிரபல பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால், திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாது காரணமாக கடந்த ஆண்டு தனது மனைவி மெஹர் ஜெஸ்ஸியாவை பிரிந்தார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மனைவியை பிரிந்த பிறகு தென்னாப்பிரிக்க மாடலும் நடிகையுமான கேப்ரியல்லா டிமாட்ரியடசை காதலித்து வந்தார் அர்ஜூன். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனது காதலி கேப்ரியல்லா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் அர்ஜூன் ராம்பால். அத்துடன் கர்ப்பமாக இருக்கும் கேப்ரியல்லாவின் புகைப்படங்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் கேப்ரியல்லாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அர்ஜூன் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு போட்டோவையும், மருத்துவமனையில் இருக்கும் தனது செல்பி போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கேப்ரியல்லா.
அத்துடன், அர்ஜூன் தனது கையில் டெடிபியர் பொம்மை வைக்கப்பட்டுள்ள கிப்ட் பாக்ஸ் வைத்திருக்கும் போட்டோவையும் கேப்ரியல்லா வெளியிட்டுள்ளார். தங்கள் குழந்தைக்கு இன்னும் பெயரை தேர்வு செய்யவில்லை என இவர்கள் கூறி உள்ளனர். அர்ஜூன் தனது இளம் வயது மகள்களுடன் மருத்துவமனைக்கு வந்து செல்லும் போட்டோவும் வெளியாகி உள்ளது.