விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி | ஐதராபாதில், 'வலிமை' படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகில் நாயகிகள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களை கடந்த சில வருடங்களில் ஆரம்பித்து வைத்தவர் நயன்தாரா. அவர் நடித்த 'மாயா, அறம்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதே சமயம் அவர் அப்படி நடித்த மற்ற படங்களான டோரா, ஐரா' ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
அவருக்குப் பிறகு ஜோதிகா அந்தப் பயணத்தை அவருடைய நடிப்புப் பயணத்தில் ரீ-என்ட்ரியாக ஆரம்பித்தார். '36 வயதினிலே, நாச்சியார்' படங்களும் சமீபத்தில் வெளிவந்த 'ராட்சசி' படமும் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. ஆனால், 'மகளிர் மட்டும்' தோல்விப் படமாகவும், 'காற்றின் மொழி' சுமாரான படமாகவும் அமைந்தது.
நயன்தாரா, ஜோதிகா ஆகிய சீனியர் ஹீரோயின்கள் முதன்மைக் கதாநாயகிகளாக நடித்து வெற்றி பெற்றாலும் அவர்கள் கால கட்ட நடிகையான த்ரிஷாவுக்கு அந்த தனி கதாநாயகி பயணம் வெற்றியைத் தரவில்லை. அவர் அப்படி நடித்த 'நாயகி, மோகினி' ஆகிய படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் படுதோல்வி அடைந்தன.
இப்போது அவர்களது வரிசையில் அமலா பால், 'ஆடை' படம் மூலம் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் பற்றிய விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் சுமாராகத்தான் உள்ளதாம். பெண்கள் படத்திற்கு வர வாய்ப்பில்லை, இளைஞர்கள் மட்டுமே வருவார்கள் என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமர்ஷியல் ரீதியாக படம் வெற்றி பெறுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியும்.