'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக 'சக்சஸ் மீட்' என்ற கலாச்சாரம் இருந்து வருகிறது. ஒரு படம் வெள்ளிக்கிழமை வெளியானால் அடுத்த சில நாட்களில், திங்கள் அல்லது செவ்வாய் அன்றே படத்தின் சக்சஸ் மீட்டை நடத்துவார்கள். ஆனால், படம் எவ்வளவு லாபம் கொடுத்தது என்பதை படத்தின் தயாரிப்பாளரும் சொல்ல மாட்டார், வாங்கியவர்களும் சொல்ல மாட்டார்கள். நடித்தவர்களும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அனைவருமே “படம் 'சக்சஸ்' அதற்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கும், சிறப்பாக விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களுக்கும் நன்றி'' என்று ஒரே மாதிரி பேசுவார்கள்.
ஆனால், நேற்று நடந்த 'கூர்கா' படத்தின் சக்சஸ் மீட்டில் படத்தை வாங்கி வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் 'கூர்கா' படத்தை வாங்கி வெளியிட்டு சினிமாவில் முதன் முதலாக லாபம் சந்தித்துள்ளேன் என்று பேசினார்.
“இந்தப் படத்தை விலை கொடுத்து வாங்கினேன். அந்த விலையில புதன் கிழமை அன்னைக்கு முதன் முதலா சினிமாவுல 5 லட்ச ரூபாய் சம்பாதிச்சேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை 15 லட்ச ரூபாய் சம்பாதிச்சிருக்கேன். இந்த தேதிலதான் சக்சஸ் மீட் வைக்கணும்னு ரொம்ப தெளிவா இருந்தேன். இந்தப் படம் 6 கோடியே 56 லட்சம் மொத்த வசூல் பண்ணியிருக்கு. நிகர வசூல் 5 கோடியே 32 லட்சம். நான் படத்தை வாங்கினதை விட சினிமாவுல 6 வருஷம் கழிச்சி, முதன் முதலா லாபம் அப்படின்னு பார்த்திருக்கேன். நான் தயாரிச்ச 3 படம் பெயிலர் ஆச்சி. இதுதான் எனக்கு முதல் லாபத்தைக் கொடுத்த படம்,” என்றார்.
15 லட்சம் ரூபாய்க்கு சக்சஸ் மீட் நடத்தி அதை வெளிப்படையாகச் சொன்ன ரவீந்தர் சந்திரசேகரை விழா மேடையில் இருந்த நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா, ரவி மரியா, படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் ஆகியோர் பாராட்டினார்கள். மேடையிலேயே சாம் ஆண்டனுக்கு தன் தயாரிப்பில் அடுத்த பட வாய்ப்பைத் தருவதாக வாக்குறுதி அளித்தார் ரவீந்தர் சந்திரசேகரன்.