Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் அடுத்தப்படம் சிவாவிற்கு?

19 ஜூலை, 2019 - 18:57 IST
எழுத்தின் அளவு:
Rajinis-Next-film-with-Director-Siva

நடிகர் ரஜினியின் கவனம் சிறுத்தை சிவா பக்கம் திரும்பியதை அடுத்து, ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் பொறுப்பு, சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். படம் விறுவிறுவேன வளர்ந்து இருக்கிறது. படத்தின் 90 சதவீத படபிடிப்புகள் முடிவடைந்துவிட்ட சூழலில், அந்தப் படத்துக்கான வெளியீடு குறித்து, படக் குழு திட்டமிட்டு வரும் நிலையில், ரஜினியின் அடுத்த படம் குறித்த பரபரப்பு தொற்றியிருக்கிறது.

ரஜினியின் அடுத்த படத்தை பா.ரஞ்சித், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரில் ஒருவர் தான் இயக்கக் கூடும் என பலரும் ஆரூடம் சொல்லி வந்தனர்.ஆனால், நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிறுத்தை சிவாவை, புதிய படத்துக்கான இயக்குநராக நியமிக்க, நடிகர் ரஜினி பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த பொங்கல் நாளில் நடிகர் ரஜினியின் பேட்ட படமும், நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமும் ரிலீஸ் ஆனது. அதில், விஸ்வாசம் படத்தை குடும்ப செண்டிமெண்ட்டோடு மிகப் பிரமாதமாக சிவா இயக்கி இருந்தார். படத்தைப் பார்த்து விட்டு, சிவாவை பாராட்டினார் நடிகர் ரஜினி. இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்து பேசினர். அப்போது இருவரும் படம் பண்ண போவதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படத்துக்கு, இயக்குநர் சிவாவை, ரஜினி பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி படத்தை இயக்குவதற்கு முன், நடிகர் சூர்யாவின் படம் ஒன்றை, சிவா இயக்குவதாக இருந்தது. தற்போது, ரஜினி பட வாய்ப்பு வந்துள்ளதால், அந்தப் படத்தை முடித்துவிட்டு, சிவா, சூர்யா பக்கம் திரும்பக் கூடுமாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: அக்ஷராஅம்மாவால் கர்ப்பிணியாக நடித்தேன்: ... பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ஆடை வெளியானது பிரச்னையை தீர்த்து வைத்த அமலாபால் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in