Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படுக்கையறை காட்சி : பெண்களை மட்டுமே விமர்சிப்பது ஏன்? ராதிகா ஆப்தே

19 ஜூலை, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Radhika-Apte-slams-Societys-Psychotic-Mentality

ரஜினி நடித்த கபாலி படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. சில படங்களில் நிர்வாண காட்சிகளிலும் நடித்துள்ள இவர், மீடூ விவகாரம் தொடங்கி சினிமாவில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பல்வேறு கொடுமைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தேவ் பட்டேலுடன் இணைந்து ராதிகா ஆப்தே நடித்த, ‛தி வெட்டிங் கெஸ்ட்' என்ற படத்தில் படுக்கை அறை காட்சி சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, ராதிகா ஆப்தேவை பலரும் விமர்சித்தனர்.

இதுப்பற்றி ராதிகா ஆப்தே கூறியதாவது : த வெட்டிங் கெஸ்ட் படத்தில் பல நல்ல காட்சிகள் உள்ளன. படுக்கை அறை காட்சியை மட்டும் விமர்சிப்பது ஏன்?. மேலும் அந்தக்காட்சியில் நானும், தேவ் பட்டேலும் சேர்ந்து தான் நடித்தோம். ஆனால் என்னை மட்டும் விமர்சனம் செய்கிறார்கள். தேவ் பட்டேலை யாரும் அப்படி நடிக்கிறார் என கூறவில்லை. இதுபோன்ற காட்சிகளில் நடிகர்களும் நடிக்கும்போது, நடிகைகளை மட்டுமே குற்றவாளிகளைப் போன்று சித்தரிப்பது ஏன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த விநியோகஸ்தர் மரணம்ரஜினிக்கு ரெட் கார்ட் கொடுத்த ... 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை 10 பேர குழந்தைகள் : ஸ்ருதி ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21 ஜூலை, 2019 - 17:22 Report Abuse
Parthasarathy Badrinarayanan பெண்களை தெய்வமாகப் பார்க்கும் நாட்டில் அப்படிதான்.ஆண்கள் சட்டையின்றி கோமணத்துடன் கூட இருக்கலாம். பெண் தெய்வங்கள் அப்படி கூடாது என்ற வேதனையில் விமர்சனங்கள் வருகின்றனர்
Rate this:
prasath -  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூலை, 2019 - 07:07 Report Abuse
prasath உன்ன மாதிரி ஆட்களால் தான். அப்படி பேச தூண்டுகிறது..
Rate this:
Senguttuvan - Thanjavur  ( Posted via: Dinamalar Windows App )
20 ஜூலை, 2019 - 02:03 Report Abuse
Senguttuvan மிக அருமையான பதிவு திரு.வசந்த் அவர்களே
Rate this:
Vasanth - Chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 20:14 Report Abuse
Vasanth முன்பு,.. ஆண்கள் கூட்டமாக உள்ள இடங்களில் யாரேனும் ஒரு பெண் சென்றால் உடனே அங்கிருக்கும் ஆண்கள் சற்றும் ஆபாசமாக பேசுவதையும் பேசகூடாத வார்த்தைகளையும் தவிர்ப்பர். சிகரெட் ஏதும் பயன்படுத்தினால் எறிந்து விடுவர். அந்த பெண் அங்கிருந்து நகரும் வரை இதை தொடர்வர். பேருந்தில் உட்கார இடம் இன்றி யாரேனும் பெண் நின்றிருந்தால் உடனே இடம் தருவர். தெருவில் அல்லது ஏதேனும் பொது இடங்களில் ஒரு பிரச்சினை என்றால் அதில் சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு முதலில் ஆதரவாக குரல் கொடுப்பர். ஏதேனும் கனமான பொருளினை ஒரு பெண் தூக்கி சென்றால் உடனே உதவ ஆண்கள் முன் வருவர். ஒரு பெண் யாரேனும் ஒரு ஆண் மீது குற்றம் சுமற்றினால் அதை அனைவரும் மறுப்பின்றி முழுமையாக நம்புவர், etc.. இங்கு, பெண்கள் பலவீனமானவர்கள் என்றோ, மோகத்தால் என்றோ காரணம் கிடையாது… முக்கியமாக, பெண் என்றால் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், பொய் பேசாதவர்கள், தூய அன்பு பாசம் உடையவர்கள், தன் குடும்பதிற்காக சுயநலம் இன்றி உழைப்பவர்கள், குடும்பத்தை நடத்துபவர்கள், குறிப்பாக ஒழுக்கமற்ற செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள், மிக மிக உறுதியான மண வலிமை படைத்தவர்கள், குழந்தை பேறு பெறும் இணையற்ற பெரும் பொறுப்பினை இயற்கை இவர்களுக்கு அளித்த தகுதி பெற்றவர்கள்,... என்ற பல அசைக்க முடியாத நம்பிக்கைகளுக்கு உரியவர்கள் என்ற பல உயரிய காரணங்களால்தான் பெண்கள் மீது ஆண்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்… ஆகையினால்தான், மது புகை முறையற்ற உறவுகள் பழக்கம் கொண்ட ஆண்கள் தன்னை பெண்கள் கண்டித்தால் அடங்கி விடுகிறார்கள். ஆனால், அதே தவறை பெண்களும் செய்தால் கண்டிக்கும் தகுதியினை இழக்கிறார்கள். ஆண்களின் தவறுகளால் வரும் பாதிப்பை விட பெண்களின் தவறுகளால் வரும் பாதிப்பு மிக அதிகம். ஏனெனில் ஆண்கள் துவண்டு விடுவர் அக்குடும்பமே பாதிப்படைகிறது. ஆனால், பெண்களால் மண வலிமையோடு குடும்பத்தை நடத்த முடியும். என்றென்றும் பெண்களை நம்பியே ஒவ்வொரு குடும்பமும் உள்ளது. தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல தவறுகளை செய்கிறார்கள். போட்டி என்பது நல்ல விஷயங்களில் மட்டுமே இருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் யார் தவறு செய்தாலும் பாதிக்கப்படுவது குடும்பமும், குழந்தைகளும் என்ற உண்மை உணர்ந்தால் தவறு செய்ய தோன்றாது.
Rate this:
AarKay - Madurai,இந்தியா
20 ஜூலை, 2019 - 07:26Report Abuse
AarKayஅருமை......
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 18:02 Report Abuse
Vasudevan Srinivasan 'திரைக்கதை மேதை' கே. பாக்யராஜ் அவர்களின் 'தூறல் நின்னு போச்சு' படத்தில் ஒரு காதல் காட்சியில் பாக்கியராஜ் அவர்கள் நாயகி சுலக்ஷனா அவர்களிடம் 'முதலிரவு' பற்றி பேசி கலாய்ப்பார் அந்த காட்சியின் முடிவில் 'தெரிந்தும் தெரியாத' விஷயத்தை 'அதான் லைட்ட ஆப் பண்ணிடுவாங்களே..' என்று தப்பிப்பார் அதாவது சினிமாவில் அந்த காட்சியை இலைமறை காயாகவே காட்டப்படும் என்பது அந்த காட்சியின் கருத்து ஆனால் போகிற போக்கை பார்த்தால் யதார்த்தம் என்ற பெயரில் 'முழு காட்சியையும்' காட்டிவிடுவார்கள் போலிருக்கிறது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in