விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் பிரபல விநியோகஸ்தராக திகழ்ந்த சிந்தாமணி முருகேசன் காலமானார். அவருக்கு வயது 80. வயது மூப்பால் காலமான இவர் சென்னை, திநகரில் வசித்து வந்தார். இவரை பற்றி இன்று இருக்கும் இளம் தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம் மூலம் விநியோகஸ்தராக களமிறங்கினார் முருகேசன். அப்படம் வெற்றிப் பெற்றதால் சிந்தாமணி அவரது பெயர் உடன் ஒட்டிக் கொள்ள சிந்தாமணி முருகேசன் ஆனார்.
சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக 16 முறை பொறுப்பு வகித்தவர். இவர் தலைவராக இருந்த காலங்களில் நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும் அலற விட்டுள்ளார். இதில் நடிகர் ரஜினிகாந்தும் அடக்கம். அவர் நடித்த உழைப்பாளி படத்துக்கு ரெட் கார்ட் போட்டவர்.
சம்பளத்துக்கு பதிலாக உழைப்பாளி படத்தின் என்எஸ்சி உரிமையை வாங்கிய ரஜினிகாந்த்துக்கு எதிராகவே வியாபார ரீதியாக அப்படத்துக்குத் தடை விதித்தார் முருகேசன். இதற்கு எதிராக கமல் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் அறிக்கைப் போர் நடத்தினார்கள். பின்னர் விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் நேரில் வந்து சென்றார்.
இப்படிப்பட்ட சிந்தாமணி முருகேசன் இன்று காலமாகிவிட்டார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். மாலையில் ஈமச்சடங்குகள் நடைபெற்று, சிந்தாமணி முருகேசனின் உடல் தகனம் செய்யப்பட்டது.