'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
மேயாதமான் ரத்னகுமார் இயக்கத்தில், அமலாபால் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ஆடை. டீசரில் வெளியான அமலாபாலின் நிர்வாணக்காட்சி, டிரைலரில் இருந்த முத்தக்காட்சி என இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாக இருந்த படம் வெளியாகவில்லை.
தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை. இதனால் படம் வெளியாகவில்லை. படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸாகவில்லை. எப்படியும் இன்று அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு படம் ரிலீசாகும் என்றார்கள்.