உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
மேயாத மான் படத்தில் அறிமுகமாகி, தற்போது விஜய் உடன், பிகில் படத்தில் நடித்து வரும் இந்துஜாவின் காட்டில், அடைமழை பொழிகிறது. அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாவதால், உற்சாகமாக இருக்கிறார், அவர். துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவருக்கு, இப்போது, சினிமா காற்று பலமாகவே வீசுகிறது.
''குறும்படங்களுக்கும், சினிமாவுக்கும், நேரம் மட்டுமே வித்தியாசம்; மற்றபடி, இரண்டும் ஒன்று தான். ஒரே மாதிரியான உழைப்பு தான் தேவைப்படுகிறது. மற்ற மாநிலத்தவரை காட்டிலும், தமிழ் பேசுபவர்களுக்கு, தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைவு என்ற நிலை, ஏற்கனவே இருந்தது உண்மை தான். இப்போது நிலைமை மாறி விட்டது. திறமை, நடிப்புக்கேற்ற உடல்வாகு இருந்தால், நிச்சயம், நம்மைத் தேடி வாய்ப்பு வரும். மொழி பேதம் பார்ப்பது இல்லை. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது,'' என்கிறார், இந்துஜா.
''எனக்கு, நடிப்பை தவிர, பிரியாணி நன்றாக சமைக்கவும், சாப்பிடவும் தெரியும். நடனமும் நன்றாக ஆடுவேன். பிகில் படம் பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது,'' என்கிறார், அவர்.