Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடை - அமலாபாலுக்கு எதிராக போலீசில் புகார்

18 ஜூலை, 2019 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Aadai-:-Complaint-against-Amalapaul-movie

ஆடை படத்தில் அமலாபால் நிர்வாகமாக நடித்தது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி நடித்ததை அமலாபால் உள்பட அப்படக்குழுவினர் நியாயப்படுத்தி வந்தபோதும், பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் அந்த காட்சியை மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்துவது மேலும் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்தநிலையில், பாமகவில் இருந்து பிரிந்து தற்போது தனிக்கட்சி தொடங்கியுள்ள ராஜேஸ்வரி பிரியா இதுகுறித்து போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து அவர் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தபோது, ஆடை படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இந்தபடத்திற்கு தணிக்கைக்குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இருப்பினும், அந்த நிர்வாண காட்சியை வைத்து படத்திற்கு விளம்பரம் தேடக்கூடாது என்று புகாரில் தெரிவித்துள்ளோம்.

நடிகை அமலாபால் கேரளாவில் இருந்து வந்தவர். அதனால் அவருக்கு தமிழ் கலாச்சாரம் தெரியவில்லை. பப்ளிசிட்டி, பணத்திற்காக இதுபோன்ற ஒரு காட்சியில் அவர் நடித்துள்ளார். இளைஞர்களின் மனதை பாதிக்குமே என்று அவர் நினைக்கவில்லை.

சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற நிர்வாண காட்சிகள் படத்தில் இருப்பதை விளம்பரப்படுத்தினால் அது கூட இளைஞர்களின் மனதை திசைதிருப்பும் செயலாக அமைந்து விடும். அதனால் தான் அந்த காட்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்ளோம். இந்த படத்தை மக்கள் தோல்வியடையச் செய்ய வேண்டும். அதை செய்ய நாங்கள் தயாராக இருப்பது போன்று மக்களும் முன்வரவேண்டும் என்றும் ராஜேஸ்வரி பிரியா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
யார்ரா கோமாளி - வைரலாகும் பாடல்யார்ரா கோமாளி - வைரலாகும் பாடல் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vasan - doha,கத்தார்
20 ஜூலை, 2019 - 17:10 Report Abuse
vasan இந்த மல்லு..... பணத்துக்காக எந்த கேடு ketta வேலையையும் வேண்டுமானாலும் செய்வாங்க......உண்மையில் அம்மா , சகோதரிகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் இந்த படத்தை பார்க்க மாட்டார்கள்........
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 17:38 Report Abuse
Vasudevan Srinivasan அந்த காட்சியை கண்டிப்பாக படக்குழு விளம்பர படுத்தவேண்டிய அவசியமே இல்ல அந்த வேலையை ஊடங்கங்கள் இலவசமாகவே செய்து விட்டன..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in