இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
போனிகபூர் தயாரிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க, பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெண்களாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தாரியங் நடிக்கின்றனர்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்ய போனிகபூர் திட்டமிட்டிருந்தார். அதற்கு விநியோகஸ்தர்கள் உடன்படவில்லை. எனவே ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதாவது ஆகஸ்ட் 8-ஆம் தேதி 'நேர்கொண்ட பார்வை'யை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்து அதனை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக அஜித் நடிக்கும் படங்களை வியாழக் கிழமைகளில் ரிலீஸ் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. சாய்பாபா பக்தரான அஜித் வியாழக்கிழமைதான் படத்தை வெளியிட வேண்டும் என்று சொல்கிறாராம். அந்த வரிசையில் இப்போது அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யும் வியாழக்கிழமை சென்டிமென்டோடு வெளியாக இருக்கிறது.
படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. ஆனால் படத்தை யார் வெளியிட போகிறார்கள் என்பது இன்னமும் வெளியாகவில்லை. ஒருவேளை போனி கபூர் எதிர்பார்க்கும் விலைக்கு படம் வியாபாரம் ஆகவில்லை என்றால் சொந்தமாக வெளியிட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.