Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபாஷ் நாயுடுவுக்கு பதில் தலைவன் இருக்கின்றான்

17 ஜூலை, 2019 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Thalaivan-Irukiran-behalf-of-Sabaash-naidu

கமல்ஹாசன் இப்போது நடித்து வரும் படம் 'இந்தியன்-2'. ஷங்கர் இயக்கும் இந்த படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

பல மாத இழுபறிக்குப் பிறகு 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் எழுதி, நடித்து, இயக்க இருக்கும் 'தலைவன் இருக்கிறான்' படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனமும், 'லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 'தலைவன் இருக்கிறான்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார். ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன்', 'தெனாலி' ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைந்திருக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தின் மூலம் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் 19 வருடங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, லைகா தயாரிப்பில் கமல் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை ஏற்கனவே அவர் கிடப்பில் போட்டார். பிறகு மீண்டும் அவருடன் லைகா கை கோர்ப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. சபாஷ் நாயுடு படத்துக்காக கமலுக்குக் கொடுத்த தொகையை கழித்துக் கொண்டு மீதி தொகையைத்தான் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு கொடுக்க இருக்கிறதாம் லைகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விவேக்கின் தாயார் காலமானார்விவேக்கின் தாயார் காலமானார் நேர்கொண்ட பார்வை - சொந்தமாக வெளியிடும் போனி கபூர்? நேர்கொண்ட பார்வை - சொந்தமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in