Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டின் 17வது போட்டியாளர் ஆல்யா மானஸா?

17 ஜூலை, 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Alya-manasa-to-enter-in-Biggboss-3

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக ஆல்யா மானஸா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நான்காவது வாரத்தில் உள்ளது. முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து கடந்த மாதம் தமிழில் மூன்றாவது சீசன் ஆரம்பமானது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இரண்டு பேர் தற்போது வெளியேறி விட்டனர். வீட்டில் 14 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர்.

இம்முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக பிக்பாஸ் துவக்க நாளன்று கமல் கூறியிருந்தார். இதனால் 17வது போட்டியாளரை மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர். சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை ஸ்ரீரெட்டி அல்லது டாக்டர்.சீனிவாசன் அந்த போட்டியாளர் என்ற பேச்சு என சமூகவலைதளங்களில் நீண்டகாலமாக உள்ளது. ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக நடித்த ஆல்யா மானஸா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பிக்பாஸில் கலந்து கொள்வதால் தான், ராஜா ராணி சீரியலை அவசர அவசரமாக முடித்ததாக கூறப்படுகிறது.

இந்தச் செய்தி உண்மையானால், பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கு சரியான போட்டியாக ஆல்யா இருப்பார். தற்போதைக்கு பெண் போட்டியாளர்களில் லாஸ்லியாவுக்குத் தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஆல்யா வந்தால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் அரசியல் பற்றி ஜோதிடர்ரஜினி - கமல் - விஜய் - அஜித்தின் ... விவேக்கின் தாயார் காலமானார் விவேக்கின் தாயார் காலமானார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

karutthu - nainital,இந்தியா
19 ஜூலை, 2019 - 09:03 Report Abuse
karutthu கமல ஹாசனுக்கு (காமஹாசனுக்கு ) கொண்டாட்டம் ?
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
18 ஜூலை, 2019 - 10:14 Report Abuse
Ram Sekar சகோதரி "Mirthika" அவர்களே ஆனால் சஞ்சீவ் கூடவே நடிக்கிற ஆளு அதுவும் வருஷ கணக்கில். பல எபிசோடுகள் சேர்ந்து நடிச்சுடுச்சு அந்த பொண்ணு "செம்பா". ரெண்டு பெரும் காதலிக்கிறதா சேர்ந்தே சொல்லிடுச்சுங்க, interview கூட சில youtube web channels பலவற்றில் பேட்டி கூட வந்திடுச்சு. இன்னும் "கிசு கிசு"-வை தாண்டலையா சகோதரி?? அப்டேட் பண்ணிக்குங்க சீரியல் பாக்காத நானே பண்ணிக்கிறேன்.
Rate this:
skv - Bangalore,இந்தியா
18 ஜூலை, 2019 - 07:46 Report Abuse
skv<srinivasankrishnaveni> அம்மாடி ஒருவழியாக முடிஞ்சுதே என்று நிம்மதியா இருக்காங்க எல்லோரும் இன்க்ளூடிங் ரசிகர்கூட்டம்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
18 ஜூலை, 2019 - 07:26 Report Abuse
Mirthika Sathiamoorthi சாமி, ரொம்ப கற்பனை பண்ணாதீங்க….ஆலியாவுக்கும் அவருடன் நடித்த சக நடிகருக்கும் காதல் கிசுகிசு இருக்கு...அடுத்தவன் காதலிக்கிற பொண்ணுக்கும், இன்னும் காதல் வயப்படாதா லெஸ்லியாவுக்கும் போட்டியா? பசங்க யார்பின்னால் நிப்பாங்க? அடுத்தவன் லவர் பின்னலையா? அட போங்க பாஸ் தமிழ்நாட்டு யங்ஸ்டாரை புரிஞ்சுகிட்டு லட்சணம் உங்க கட்டுரையில் நல்லா தெரியுது….
Rate this:
Krish - Chennai ,இந்தியா
18 ஜூலை, 2019 - 04:44 Report Abuse
Krish குணத்தை பொறுத்தது..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in