சிவகார்த்திகேயன், 'யூ டர்ன்!' | முக்கிய கதாபாத்திரத்தில் கவுசல்யா | அடர்ந்த காட்டில் படப்பிடிப்பு! | 'குயின்' அதிரடி திருப்பம்! | சிறப்பான, 'டுவிஸ்ட்!' | நகைச்சுவை கலாட்டா! | கமலை சந்தித்த பிராவோ | 2021ல் ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் நிகழும் : சத்திய நாராயணராவ் | இந்து மதத்தில் தொடரும் நயன்தாரா | பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர்: நடிகை மஞ்சரி பட்நிஸ் |
எமன் படத்தில் அரசியல்வாதியாக நடித்த விஜய் ஆண்டனி, மீண்டும் ஒரு படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார். பிரசாந்த் நடித்த ஜாம்பவான், அர்ஜுன் நடித்த வல்லக்கோட்டை படங்களை தயாரித்த, சசிகுமார், நிக்கி கல்ராணி நடிக்கும் ராஜவம்சம் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிற செந்தூர் பிலிம்ஸ் டி.டி.ராஜா தயாரிக்கிறார்.
ஆள், மெட்ரோ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். ஜோகன் இசை அமைக்கிறார். என்.எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
ஆள் படத்தில் ஜெட்லாக் எனப்படும் பிரச்சினையில் சிக்கிய இளைஞனை பற்றியும், மெட்ரோ படத்தில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் இளைஞர்களை பற்றியும் சொன்ன ஆனந்த கிருஷ்ணன், இதில் அரசியல் பேச இருக்கிறார். இன்றைய அரசியல் நிலவரங்களை சொல்லும் அதிரடி அரசியல் படமாக உருவாகிறது. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.