வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
விஷ்ணு விஷால் அடுத்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் டைட்டில் எப்.ஐ.ஆர். போலீஸ் துறையின் முதல் தகவல் அறிக்கை என்ற பொருளை இது குறிப்பிட்டாலும். டைட்டிலுக்கு கீழே பைசல், இப்ராஹிம், ரியாஸ் என மூன்று இஸ்லாமிய பெயர்களை குறிப்பிட்டு அதன் முதல் எழுத்து எப்.ஐ.சூர் என்று பொருள்படும்படி உள்ளது.
பின்னணியில் "ஐ.எஸ்.அமைப்பை சேர்ந்த சென்னை வாலிபர்கள் கைது" என்ற பத்திரிகை செய்தி இடம் பெற்றுள்ளது. இதனால் இது சென்னையை சேர்ந்த தீவிரவாதிகள் கதை என்பது உறுதியாகிறது. இதில் விஷால் தீவிரவாதியாக நடிக்கிறாரா, அல்லது அவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறாரா? என்று தெரியவில்லை. ஆனால் அவர் பர்ஸ்ட் லுக்கில் தீவிரவாதிகள் போன்று உடை அணிந்திருக்கிறார்.
இந்தப் படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்குகிறார். சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார். மஞ்சிமா மோகன் ஹீரோயின். அஷ்வத் இசை அமைக்கிறார், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். விஷ்ணு விஷாலின் பிறந்தநாளான நேற்று பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.