18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்தும், தமிழக பா.ஜ., தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சிகள், சமூக சேவை அமைப்புகள் போன்றவை சூர்யாவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சூர்யாவை கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டி, ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான தகுதி சூர்யாவுக்கு உண்டு.
புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்கள் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.