Advertisement

சிறப்புச்செய்திகள்

உச்சநட்சத்திரத்தை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியல் : பாராட்டுகளால் இயக்குநர் நெகிழ்ச்சி | தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி | 2022 டிசம்பரில் இவ்வளவு படங்கள் வெளியாகுமா? | 'டிமான்டி காலனி 2' படப்பிடிப்பு ஆரம்பம் | தி காஷ்மீர் பைல்ஸ் படம் கற்பனை என்று நிரூபித்தால் படம் இயக்குவதை நிறுத்தி விடுகிறேன் : இயக்குனர் சவால் | மண்சார்ந்த படங்களையே உயிர் உள்ளவரை எடுப்பேன் : தங்கர் பச்சான் | முதல்வர் வேடத்தில் விஜய்சேதுபதி? | தேசிய திரைப்பட கழகத்துக்காக படம் தயாரிக்கிறார் லிங்குசாமி | தமிழில் இன்று 'கோல்டு' வெளியாகாதது ஏன்? | ரஷ்யாவில் 'புஷ்பா' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜோதிகாவின் ராட்சசி படக்குழு மீது போலீசில் புகார்

16 ஜூலை, 2019 - 18:56 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Raatchasi-movie

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர், ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படக் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதையம்சம் உள்ள, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ராட்சசி படத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார் ஜோதிகா. அரசு பள்ளிகளின் நிலைமை பற்றியும், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக வேலை செய்யாமல் சம்பளவம் வாங்குவதாகவும் அப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை கௌதமராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தைப் பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கோபமடைந்தனர். ராட்சசி படத்தை தடைசெய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர். சென்னை காவல்துறை ஆணையரிடமும் இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், "கடந்த 5ம் தேதி வெளியான ராட்சசி படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேண்டுமென்றே எங்கள் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.

முற்போக்கு போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி. ஆசிரியர்கள் ஜாதி வெறியை புகுத்துகிறார்கள் என்பது போன்ற தவறான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயச்சியாகும்.

எனவே ராட்சசி படத்தினை தடைசெய்ய வேண்டும். குறைந்தபட்சம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இயக்குனர் கவுதம்ராஜ் மற்றும் வசனகர்த்தா பாரதிதம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'பிக்பாஸ் 3' - வனிதா வெளியேற என்ன காரணம் ?'பிக்பாஸ் 3' - வனிதா வெளியேற என்ன ... சூர்யாவுக்கு கமல் ஆதரவு சூர்யாவுக்கு கமல் ஆதரவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in