சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
'பிக் பாஸ் 3' நிகழ்ச்சி ஆரம்பமாகி ஒரு மாத காலம் நெருங்கப் போகிறது. முதல் இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த வீடு, மீரா மிதுன் நுழைந்த நாளிலிருந்து சண்டை, சச்சரவுகளுக்கு மாறியது. ஒவ்வொருவருடனும் அவர் சண்டை போட்டுக் கொண்டும், அடிக்கடி அழுது கொண்டும் அவர் மீது ஒரு 'சிம்பதி' உருவாக்கினார்.
இருந்தாலும் வீட்டில் வனிதா விஜயகுமார் குரல் தான் ஓங்கி ஒலித்தது. அவர் பேச ஆரம்பித்தால் எதற்கு வம்பு என அனைவரும் ஒதுங்கிப் போகும் நிலை வந்தது. முதல் இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த தர்ஷன் மட்டுமே வனிதாவை எதிர்த்து இரண்டு முறை பதிலுக்குக் குரல் எழுப்பினார். கடந்த வாரம் வனிதாவை எலிமினேஷனுக்காகப் பலரும் நாமினேட் செய்தார்கள்.
முதல் போட்டியாளராக வெளியேறிய பாத்திமா பாபு கூட அவரது பேட்டியில் வனிதா கண்டிப்பாக வெளியில் வர மாட்டார். அவர் வெளியில் வந்தால் நிகழ்ச்சிக்கான 'கன்டென்ட்' சுவாரசியமாக இருக்காது என்றார். எனவே, பலரும் வனிதா வெளியேற மாட்டார் என்றே கருதினார்கள். ஆனால், இரு தினங்களுக்கு முன்பு வனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அவருக்குக் குறைந்த வாக்குகள் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வனிதா பெயரை கமல்ஹாசன் காட்டியதுமே அவர் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். தான் எப்படியும் வெளியேற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தார் வனிதா.
வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினை காரணமாக பிக்பாஸ் வீட்டுக்கே சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நிகழ்ச்சியில் வனிதா அனைவரையும் 'டாமினேட்' செய்ய ஆரம்பித்தார். அவருடைய சில செயல்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. எனவேதான் அவர் வெளியேற்றப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
மோகன் வைத்யா தான் வெளியேறுவார் எனப் பலரும் சொன்ன நிலையில் வனிதா வெளியேற்றம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. வனிதா இடத்தை நிரப்புவதற்காக விரைவில் ஒரு புதிய போட்டியாளர் நுழையலாம் என்கிறார்கள். அது இந்த வாரம், அல்லது அடுத்த வாரம் நடந்துவிடலாம்.