Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்ப் படங்களுக்கு சவால் விடும் 'தி லயன் கிங்' ரிலீஸ்

16 ஜூலை, 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
The-Lion-King-competitive-with-Tamil-Films

தமிழ்நாட்டில் நேரடியாக தமிழில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் பலர் திண்டாடி வருகிறார்கள். ஆனால், வேற்று மொழிப் படங்களான தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகும் படங்களுக்கு தமிழ்ப் படங்களை விட அதிக தியேட்டர்கள் கிடைத்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிகமாகி வரும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சிறிய, புதுமுக நடிகர்கள் நடிக்கும் தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களைத் தருவதில்லை. அப்படியே கொடுத்தாலும் ஒரு நாளைக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

இதனிடையே, இந்த வாரம் ஜுலை 19ம் தேதி வெளியாக உள்ள 'தி லயன் கிங்' ஆங்கிலப் படம், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு நேரடித் தமிழ்ப் படங்களுக்கு சவால் விடும் விதத்தில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த வாரம் வரும் தமிழ்ப் படங்களில் விக்ரம் நடித்துள்ள 'கடாரம் கொண்டான்' படம், அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படம், சென்னையில் மட்டும் சுமார் 30 தியேட்டர்களில் வெளியாகிறது. அதே அளவிற்கு 'தி லயன் கிங்' படமும் 30 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே வசூலுக்கு திண்டாடி வரும் தியேட்டர்காரர்களுக்கு மேலே சொன்ன மூன்று படங்களும் நல்ல வசூலைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சை ரா', டபுள் ஜாக்பாட் என்கிறார் தமன்னா'சை ரா', டபுள் ஜாக்பாட் என்கிறார் ... வடசென்னை 2 கைவிடப்படவில்லை : தனுஷ் வடசென்னை 2 கைவிடப்படவில்லை : தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16 ஜூலை, 2019 - 19:46 Report Abuse
Natarajan Ramanathan ஆடை படம் ரொம்பவே சுமார் என்று கேள்வி. ஒரு வாரம் மட்டுமே ஓடுமாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in