Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சபாஷ் நாயுடு' டிராப், 'தலைவன் இருக்கின்றான் ரீ-ஸ்டார்ட்

16 ஜூலை, 2019 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Sabash-naidu-drop,-Thalaivan-Irukiran-restart

'பாபநாசம்' படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தூங்காவனம், விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. அதற்குப் பிறகு கமல்ஹாசன் ஆரம்பித்த 'சபாஷ் நாயுடு' படமும் அமெரிக்காவில் ஒரு கட்டப் படப்பிடிப்புடன் அப்படியே நின்று போனது. 'இந்தியன் 2' நிலைமை என்னவென்றே புரியாமல் இருக்கிறது.

'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தை 2010ம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பின் அந்தப் படத்தின் நிலை என்ன ஆனதென்றே தெரியாமல் இருந்தது. அவ்வப்போது ஏதாவது ஒரு தகவல் வெளியாகும், ஆனால் ஒன்றும் நடக்காது. 2017ம் ஆண்டில் மீண்டும் படத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்கள். கடந்த இரண்டு வருடங்களாக எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் நேற்று திடீரென 'தலைவன் இருக்கின்றான்' படத்திற்கு இசையமைக்கப் போவதாக ஏஆர் ரஹ்மான் டுவிட்டரில் அறிவித்தார். அதற்கு பதிலளித்து கமல்ஹாசனும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.

லைகா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள்தான் 'சபாஷ் நாயுடு, இந்தியன் 2'. இப்போது அந்தப் படங்களை அப்படியே விட்டுவிட்டு கமல்ஹாசன் 'தலைவன் இருக்கின்றான்' படத்தை ஆரம்பிக்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சபாஷ் நாயுடு' படம் கண்டிப்பாக டிராப் என்கிறார்கள். 'இந்தியன் 2' சஸ்பென்ஸ் மட்டும் தொடர்கிறது. ஆகஸ்ட்டில் தொடங்கும் என கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிக்கும் படங்களைப் பொறுத்தவரையில் அவர்தான் 'பிக் பாஸ்'. அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நிகிஷாஆரவ்விற்கு லிப் லாக் முத்தம் ... 'சை ரா', டபுள் ஜாக்பாட் என்கிறார் தமன்னா 'சை ரா', டபுள் ஜாக்பாட் என்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஜூலை, 2019 - 17:58 Report Abuse
Vasudevan Srinivasan சபாஷ் நாயுடு ஏன் ட்ராப்பானது..?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in