ரொமான்டிக் ரவுடியாக யோகிபாபு | விஷாலுக்கு வில்லன் ஆகும் ஆர்யா | கன்னியாகுமரி கோவிலில் நயன்தாரா: மூக்குத்தி அம்மனுக்காக விரதம் தொடங்கினார் | ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மகாநதி ஷோபனா வழக்கு | 'நான்அப்படிப்பட்டவள் அல்ல! | நடிகையின் சமூக விழிப்புணர்வு! | சிறப்பான கதாபாத்திரம்! | 'மியூசிக் டூர்' போகும் படக்குழு! | புராண படத்தில் ஆரி! | துப்பறியும் வேடத்தில் ஸ்ருதி |
கே.பாலச்சந்தர் இயக்கிய முக்கிய படங்களில் ஒன்று பூவா தலையா?. 1969களில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், எஸ்.வரலட்சுமி, ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீகாந்த, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு நடித்திருந்தார்கள். எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அருள் பிலிம்ஸ் சார்பில் ராம.அரங்கண்ணல் தயாரித்திருந்தார்.
எஸ்.வரலட்சுமியின் மூத்த மகள் ராஜஸ்ரீயை திருமணம் செய்கிறார் ஜெமினி கணேசன். இளம் வயதிலேயே மனைவி இறந்து விட விடோவர் ஆகிறார் ஜெமினி. அவருக்கு தன் இளைய மகள் வெண்ணிற ஆடை நிர்மலாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் எஸ்.வரட்சுமி. ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலாவை ஜெமினி கணேசனின் தம்பி ஜெய்சங்கர் காதலிக்கிறார். இவர்கள் காதலை வரலட்சுமி உடைக்க திட்டமிடுவதும், அதை ஜெய்சங்கர் சமாளிப்பதும் தான் கதை. இதன் உடன் நாகேஷ் - வரலட்சுமி இடையேயான சவாலும் இடம்பெறும். இதனை காமெடி, காதல், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருப்பார் கே.பாலச்சந்தர்.
வாலியின் பாடல் வரிகளில் ‛‛போட சொன்னால் போட்டுக்கிறேன்..., பாலாடை மேனி..., சரிதான் போடி வாயாடி..., பூவா தலையா போட்டால் தெரியும்..., மதுரையில் பறந்த மீன் கொடியை...'' போன்ற அற்புதமான பாடல்கள் இடம் பெற்று இருந்தன.
இந்த படம் பொம்ம புருஷா என்ற பெயரில் தெலுங்கிலும், பலபிரேக்ஷணம் என்ற பெயரில் மலையாளத்திலும், போலண்டு உய்யாலே என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. 4 மொழிகளிலும் வெற்றி பெற்றது.