Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானி சங்கர்

16 ஜூலை, 2019 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Priya-Bhavani-Shankar-to-joints-in-Indian-2

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, கஸ்தூரி நடிப்பில் 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'இந்தியன்'. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் பல மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. அதாவது 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாதம் 18-ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில் ஒருகட்டத்தில் இந்தியன் 2 படம் கைவிடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மீண்டும் 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இப்போது 'பிக்பாஸ்-3' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புடன் 'இந்தியன்-2' படத்தில் நடிக்கவும் தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் ஆகஸ்ட் மாதம் துவங்கி 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

'இந்தியன்-2' படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ஷங்கரும் அனிருத்தும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. தற்போது ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாகக்கூடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தொடங்கிய சைக்கோமீண்டும் தொடங்கிய சைக்கோ பொங்கியெழுந்த சூர்யா ரசிகர்கள் பொங்கியெழுந்த சூர்யா ரசிகர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in