Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவனை தட்டி எழுப்பும் கமல்

16 ஜூலை, 2019 - 10:17 IST
எழுத்தின் அளவு:
Kamal-backs-to-Thalaivan-Irukiran

பல ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரிக்க முடிவு செய்திருந்த படம் தலைவன் இருக்கிறான். அதன் பிறகு விஸ்வரூபம் 2ம் பாகம், உத்தம வில்லன், தூங்காவனம், சபாஷ் நாயுடு, இந்தியன் 2 என வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராகி விட்டார். இதனால் அரசியலை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடிக்க திட்டமிடுகிறார். இந்தியன் 2ம் பாகம் அப்படி ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அது டேக்அப் ஆகாமல் அப்படியே நிற்கிறது.

இந்த நிலையில் தான் அவர் தனது தலைவன் இருக்கிறான் கதையை தூசி தட்டி எடுக்கிறார். இதனை அவரது ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். படத்தை பிரமாண்டமாக உருவாக்க இருப்பதால் தனது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஜிப்ரானை விட்டு, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த கமல் படத்தின் பாடல்கள் குறித்து விவாதித்துவிட்டு திரும்பியிருக்கிறார். இந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தலைவன் இருக்கிறான் படத்தில் தான் பணியாற்ற இருப்பதை உறுதி செய்திருக்கிறார். கமலும் இதனை உறுதிப்படுத்திப்படுத்தி இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
‛நேர்கொண்ட பார்வை' ஆக.,8ல் ரிலீஸ்‛நேர்கொண்ட பார்வை' ஆக.,8ல் ரிலீஸ் வாழ் படப்பிடிப்பு நிறைவு வாழ் படப்பிடிப்பு நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 ஜூலை, 2019 - 17:55 Report Abuse
Vasudevan Srinivasan கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா அவர்கள்தான். என்ன காரணத்தினாலோ விருமாண்டிக்குப்பின் கமல் அவர்கள் இசைஞானியுடன் இணையவில்லை..
Rate this:
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2019 - 14:30 Report Abuse
வழிப்போக்கன் கமலின் போலித்தனம் தெரிகிறது.. முதலில் ராஜா ராஜா என்று தூக்கி வைத்து கொண்டாடிய ஒருவரை விட்டு விட்டு, இவர் பெயர் போட்டால் வியாபாரம் ஆகும் (ரஹ்மான்க்கு இன்று ஹிட் இல்லை என்ற பொழுதும்) என்ற காரணத்தால் இது .. (ராஜா போட்டால் ஹிந்தி விலை போகாது அது போலவே ஜிப்ரான் ) அடுத்து இன்னமும் படம் மூலம் (இவன் யார் தெரியுமா என்ற) பிம்பத்தை ஏற்படுத்த்தும் முயற்சி இது ஆனால் இளைய சமுதாயம் சினிமா மாயையை விட்டு விலகி விட்டது என்பது தெள்ள தெளிவு .. அதற்கு சென்ற சில தேர்தல்கள் சாட்சி ..
Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
16 ஜூலை, 2019 - 13:47 Report Abuse
Ramamoorthy P மோடி என்கின்ற தலைவன் நிதர்சனத்தில் இருப்பதை மக்கள் உணர்ந்ததினால் தான் மோடி திரைப்படத்தை மக்கள் கண்டு கொள்ளவில்லை. எது நிழல், எது நிஜம் என்பதை ஒரு திரைப்படம் உணர்த்திவிடாது. அது மாயை என்பதை இங்கிருப்பவர்கள் இன்னும் உணரவில்லை. அதனால் தான் திரைபபடத்தின் மூலம் தங்களை அடையாள படுத்திக்கொள்ள கமல் முயல்கிறார் போலும்.
Rate this:
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
16 ஜூலை, 2019 - 13:42 Report Abuse
sridhar உங்களுக்கு கட்சி நடத்த காசு வேணும் அத எப்படி சம்பாதிச்சா என்ன மக்கள் என்று சினிமாவை அதன் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அன்று தான் விடிவுகாலம்
Rate this:
oce - tokyo,ஜப்பான்
16 ஜூலை, 2019 - 13:24 Report Abuse
oce சங்க தமிழ் வளர்த்த பொன்மன செம்மல் ஒளி விளக்கில் சிறு நடை போட்டவனே.. உன் அழகான தமிழ் இலக்கிய தமிழ் எவருக்கும் புரியாத தமிழ் பேச்சு நடை தமிழக மக்களை கவர்க. நீ தலைவனாக வருவதில் சிலருக்கு எரிச்சல் அதிகமாகும். நீ நாளை ஆட்சியை பிடித்தால் அவர்களுக்கு தோல்வி அல்லவா வரும். இப்போதே அவர்கள் அடுத்த ஆட்சிக்கு எவரையும் நகர விடாமல் பூனைக்கு மணி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்த பக்கம் பாயலாம் என ரஜினி பார்க்கிறார். உண்மை தமிழா மறத் தமிழா இன மான தமிழா புரட்சி தமிழா மணி பிவாக பேச்சு தமிழா அவரை உன் பக்கம் இழுத்து அணைத்துக்கொள். தமிழகத்தை காப்பாற்று.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in