Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருள்நிதிக்கு ஜோடியாகும் 'பிக்பாஸ்' லாஸ்லியா?

15 ஜூலை, 2019 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Losliya-to-pair-with-Arulnidhi

சென்னை: பிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா, புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 3யில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள போட்டியாளர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.

தினமும் காலையில் நடனம் ஆடுவதைத் தவிர, பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அவர் பிரச்சினைகளில் எதிலும் பெரிதாக சிக்கவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த நாளன்றே சமூகவலைதளங்களில் அவருக்கான ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.

அவருக்கு தமிழ் படத்தில் நாயகியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிச்சயம் தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களும் நம்புகின்றனர்.

இந்நிலையில், புதிய படமொன்றில் லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாபிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதா ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள்' ஜோதிகாவின் ‛பொன்மகள் வந்தாள்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 15:00 Report Abuse
Jayvee கலைஞர் குடும்பத்தில் தப்பி பிறந்த அருள்நிதி.. தரமான படம் குடுக்குறார். ஆபாசம் இல்லை .. தம்பி உதயநிதி இன்னும் வளரனும்
Rate this:
skv - Bangalore,இந்தியா
16 ஜூலை, 2019 - 07:02 Report Abuse
skv<srinivasankrishnaveni> arulnithiyum mukavin peranaa?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in