அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா |
சிவா, பிரியா ஆனந்த் நடிக்கும் புதியபடம் சுமோ, இவர்களுடன் விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். சிவா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு படங்களை இயக்கிய ஹோசிமின் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: சுமோ என்றால் மல்யுத்த வீரர் என்று பொருள். படத்தில் யோஷினேரி தஷிரோ என்ற ஜப்பானிய மல்யுத்த வீரர் நடிக்கிறார். இந்த படம் இந்தியா, ஜப்பானிய கூட்டுத் தயாரிப்பாகும். இது ஜப்பானிய சுமோக்களின் வாழ்க்கையை பற்றிய படம்.
40 முதல் 45 வயது வரையிலான 18 சுமோக்கள் நடித்துள்ளனர். ஜப்பானில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். காமெடி, செண்டிமென்ட் ஆக்ஷன் கலந்த படம். உலகில் அன்புதான் வலிமையானது என்பதை சொல்லும் படம். என்றார்.