Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கனிமொழியை நோக்கி கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி

14 ஜூலை, 2019 - 14:50 IST
எழுத்தின் அளவு:
kasthuri-questioning-dmk-MP-kanimozhi

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து வருகிறது. சமீபத்தில், தான் பீப் சூப் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நபரை அவரது வீடு தேடி சென்று தாக்கிய சம்பவமும் நடந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழி, எதை உண்பது என்று முடிவெடுப்பவர் உண்பவர் மட்டுமே, மற்றவர்கள் அல்ல -என்று தனது சமூகவலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால் அதையடுத்து, அதேபோல்தான் எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் கற்பவர்கள் மட்டுமே, நீங்களும், உங்கள் கட்சியும் அல்ல என்று அவருக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.


இப்படியான நிலையில் நடிகை கஸ்தூரியும் கனிமொழியின் கருத்துக்கு எதிராக ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில், 60 ஆண்டுகால திராவிட ஆட்சி கண்ட தமிழ்நாட்டில், அடுத்த வேளை உணவு என்பதே உண்டா என்று தீர்மானிக்கும் நிலையில் பல குடும்பங்கள் இல்லை. எனக்கு தெரிந்த சில மதங்களில் உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த மதங்களை குறை சொல்கிறாரா கனிமொழி அவர்கள்? என்று அவரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.


Advertisement
கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய
ராசியில்லாத நடிகையான சாய்பல்லவிராசியில்லாத நடிகையான சாய்பல்லவி நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் : ஓட்டளித்த கமல் நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (27)

murali - Chennai,இந்தியா
18 ஜூலை, 2019 - 18:24 Report Abuse
murali Kasthuri avargaluku veru mozhi karka vu menral? Tamil natta vittu, Vera manilathukku sellalam,
Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
17 ஜூலை, 2019 - 14:29 Report Abuse
narayanan iyer மற்ற மாநிலங்களில் அவரவர் மொழி, ஹிந்தி படித்தால் முடங்குவதில்லை. இங்கு மட்டும் எப்படி அழியும் ?அறுபத்தியெழில் திமுக ஏற்படுத்திய மொழி அல்ல தமிழ் .பல ஆயிரம் ஆண்டுகள் வாழ் ந்துக்கொண்டுதானே தமிழ்மொழி . அப்படி இவர்களால்தான் தமிழ்மொழி இருக்கிறது என்றால் ஒழுங்காக தமிழில் முதலில் வல்லினம் இடையினம் மெல்லினம் எழுத சொல்லுங்கள் பார்ப்போம். தமிழுக்கு ஏன் உரை? இவர்களின் ஆட்சியில் எது செய்தாலும் மக்கள் நலன் அடுத்தவன் செய்தால் மறுப்பு .அதையும் இந்த தமிழ்மக்கள் நம்பி தங்களின் வாழ்க்கையை கெடுத்துக்கொள்கிறார்கள் .
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
17 ஜூலை, 2019 - 05:21 Report Abuse
 nicolethomson அவரவர் உணவு அவரவர் விருப்பம் என்றால் அவரவர் வீட்டு டிவி யில் அவர்களுக்கு வேண்டிய நிகழ்ச்சிகள் மாத்திரம் போடவேண்டும் ஆனால் காசு வருதுன்னு இப்படி ஆடறீங்களே கனி ?
Rate this:
skv - Bangalore,இந்தியா
17 ஜூலை, 2019 - 03:38 Report Abuse
skv<srinivasankrishnaveni> RAASAATHTHIKKU VAAYS KANIMOLI AVLOTHAAN AMMAAVUM KAINAADDU PONNUM THARKURI
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
16 ஜூலை, 2019 - 18:18 Report Abuse
Dr.C.S.Rangarajan எதை உண்பது என்பதை உண்பவர் முடிவெடுக்கலாம் என்றாலும், உண்பவரின் உடல்நிலை 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற நிலையில் 'உணவு கட்டுப்பாட்டினை' மருத்துவர் அறிமுகப்படுத்தலாம் இல்லையா? எதை 'குடிப்பது' என்பதை குடிப்பவர் முடிவெடுக்கலாம் என்றாலும், குடிப்பது உடல் நலத்திற்கு ஊறுபயக்கும் அல்லவா? யாகாவாராயினும் "நாகாக்க' என்பது அவசியம் இல்லையா?
Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in